தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை நிலவரம் என்ன தெரியுமா?


தென்தீபகற்ப பகுதியின் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் வேளாண்மை, குடிநீர் போன்ற தேவைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு என்பது 33.4 செ.மீ ஆகும். ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முழுமையாக வரும் 15 ஆம் தேதி விடைபெறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே அதன் பிறகுதான்  வடகிழக்குப்பருவமழை எப்போது தொடங்கும் என்பதை வல்லுநர்கள் கணிப்பார்கள். 

வழக்கமான வடகிழக்குப் பருவமழை என்பது அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். நடப்பு ஆண்டில் வழக்கமான மழை அளவை ஒட்டி 88 சதவிகிதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதே போல அதிகபட்சமாக 112 சதவிகிதம் வரை கூட பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. 

Must Read: பருவமழை தாமதம் குறித்த கவலை பதிவுகள்…

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை என்பது வழக்கமானதாக அல்லது வழக்கத்தை விட அதிக அளவில் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பெருங்கடல் முழுவதும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு மற்றும் எல்நினோ விளைவுகள் பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்?

இது குறித்து பேசியிருக்கும் சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், “தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழை குறித்து 1901ஆம் ஆண்டில் இருந்து பார்த்து வரும் நிலையில் இதுவரை 16 முறை எல்நினோ மற்றும் இந்திய பெருங்கடலில் வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதத்தில் நேரிட்ட மாறுபாட்டால் மழை பொழிவு என்பது வழக்கமாகவோ அல்லது வழக்கத்துக்கு அதிகமாகவோ இருந்திருக்கிறது,” என்றார். 

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டில்  நடப்பாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை சராசரியான மழை பெய்துள்ளது. குறிப்பாக செப்டம்பர்மாதம் வழக்கத்தை விட 8 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 44.8 சதவிகிதம் மட்டுமே.ஆனால், நடப்பாண்டு 74 சதவிகிதம் சென்னையில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

#DeficientMonsoon #ElNinoEffect #nemonsoon2023 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments