மார்ச் 23, 24ம் தேதிகளில் பெருங்கதையாடல் நிகழ்வும் காடறிதல் பயணமும்.


சூழலியல் சுற்றுலாவுடன் கதையாடல் 

மழைகாடுகளை நோக்கி ஒரு பயணம் 

உலக காடுகள் தின சுற்றுலா 

உலக கதை சொல்லல் தினமான மார்ச் - 19 மற்றும் உலக காடுகள் தினமான மார்ச் - 21 ஆகியவற்றை முன்னிட்டு மார்ச்- 23,24(2024)- சனி & ஞாயிற்றுக் கிழமை - இரண்டு நாள் சூழலியல் சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் தொடங்கி கேரளாவின் பரம்பிக் குளம் புலிகள் சரணாலயம் வரை சூழலியல் எழுத்தாளர் திரு.கோவை சதாசிவம் ஐயாவுடன் ஆனைப்பாடியில் ஒரு பெருங்கதையாடல் நிகழ்வு மற்றும் கானுலா.நடைபெறுகிறது.

தேயிலைத் தோட்டம் இல்லாத ஒரு மழைக்காட்டுத்தீவில் வனத்துறையின் பாதுகாப்பில் ஒரு பயணம் நடைபெறுகிறது. அதிக மழையும், சூடான தட்பவெப்பமும் உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படும் காட்டுப் பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. 

மழைக்காடு பல்லுயிரியித்தில் மிகச் சிறந்தது இப்பூமியின் பரப்பளவில் இரண்டு பங்குங்கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை இம்மழைக்காடுகளில் காணலாம்.

Must Read:  தண்ணீர் தாகத்துக்கானது…லாபத்துக்கானது  அல்ல!

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன தாவரங்களில் சேமிக்கப்ட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கும் உணவாக அமைகிறது. 

அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழ்நிலைக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்திதயாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகறிது. உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்திகிறது. வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

இப்புவிக்கும், மனித குலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகினற்ன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் அடர்ந்து இருக்கின்றன. 

காடறிதழ் பயணம்

மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்குகாகவும், வெட்டுமரத் தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது.

இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஆணைமலைப்பகுதியிலுள்ள வால்பாறை. இங்கு கண்னுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத் தோட்டங்களைக் காணலாம், காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத் தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப் போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள், துண்டுச்சோலை என்றும் அழைக்கின்றனர்.

Must Read: பற்றாக்குறை பருவமழை, அதிகரிக்கும் எல்.நினோ விளைவு.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?

இத்துண்டுச் சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச் சுற்றிலும் ஆணைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம், புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசியப் பூங்க, சின்னார் சரனாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச் சோலைகள் உள்ளன.

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர்விட்டு, நாற்றாகி மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும், ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச் சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும். 

ஒரு மரம், நடப்பட்டத்திலிருந்து 15 மீட்டர் வரை வளர்வதற்கு சுமாராக 12 ஆண்டுகள் பிடிக்கிறத இப்படி ஒரு மரத்திற்கு மட்டுமே இவ்வளவு பெரிய கதை உள்ளது எனில் ஒரு காட்டிற்கு எவ்வளவு பெரிய கதை இருக்கும்.. வாருங்கள் கதைகளை கேட்டுக் கொண்டே காட்டில் பயணிப்போம்..நிகழ்வில் பங்கேற்பதற்கு 9790388452, 9500125125 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். 

#westernghatsrainforest  #rainforest  #rainforesttraval  

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments