
சிறந்த அங்கக விவசாயி விருது பெற இணையம் வழியே விண்ணபிக்கலாம்…
சிறந்த அங்கக விவசாயி விருது பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறையில் அக்ரீஸ்நெட் இணையதளத்தின் வழியே நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி உழவர் நலத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மையில் நம்மாழ்வாா் ஆற்றிய பெரும் பணியை அங்கீகரிக்கும் வகையில் நிகழாண்டில் சிறந்த அங்கக விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என 2023-2024- ஆம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவா் நலத்துத் றை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அங்கக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்துதல், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னாா்வனாா் விவசாயிகளை கௌரவித்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
Must Read: வேளாண்மை பயின்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் வாய்ப்பு என்ன தெரியுமா?
அங்கக விவசாயத்தை முறையாக கடைபிடித்துத் வெற்றி காணும் விவசாயிகளைக் கண்டு, அவா்களின் உதவியுடன் இதர விவசாயிகளும் உத்வேகத்துடன் அங்கக வேளாண்மையில் ஈடுபட தூண்டுதலாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு கருதுகிறது.
விருது பெற தகுதிகள்
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கா் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வெண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வெண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்ட த்தில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பேரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரொ க்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை முதல்வரால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
பரிசு மற்றும் விருது
முதல் பரிசாக ரு.2.5 லட்ச ம், ரூ.10,000-மதிப்பிலான பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சத்துடன் ரூ.7,000 மதிப்பிலான பதக்கம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சத்துடன் ரூ.5,000 மதிப்பிலான பதக்கத்துடன் விருதும் வழங்கப்படும்.
இந்த விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரீஸ்நெட் https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில் நவ.30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவுக் கட்டட் ணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
#bestorganicfarmeraward #NammalwarAward #farmersaward #organicagriculture
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments