நம்மாழ்வாரை நினைவுகூரும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்க மறவாதீர்…
நம்மாழ்வாரை நினைவு கூரும் நிகழ்வுகள்
திருக்கழுகுன்றத்தில் 30ம் தேதி நிகழ்வு
வானகத்தில் 1ம் தேதி நடக்கும் நிகழ்வு
தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டில் நம்மாழ்வார் ஐயாவின் 10ம் ஆண்டு நினைவேந்தல்
இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பத்தாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனியன்று தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டில் அன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.
நிகழ்வுக்கு அருகமை தமிழ்நிலம் திராவிடப்பண்ணை நிறுவனர் சட்டமன்ற மேநாள் உறுப்பினர் திரு.வீ.தமிழ்மணி தலைமையேற்க, கரிம வேளாண் கட்டமைப்பின் நிறுவனர் முனைவர் அரு.சோலையப்பன்,தலைவர் திரு. அரியனூர் ஜெயச்சந்திரன்,மரபு விதைக் காவலர், ஓரக்குழி நாவலின் ஆசிரியர் திரு வானவன் ஆகியோர் முன்னிலையேற்க, தோழமைப் பண்ணையாளர் பொன்பண்ணை திரு. கணேஷ் வரவேற்புரையாற்ற,நிகழ்ச்சி நெறியாளராக யாமும் பங்கேற்க உள்ளோம்.
Must Read: இயற்கை வேளாண்மையை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி
ஐயா நம்மாழ்வார் படத்தை மண்ணியல் அறிஞர், தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களும், மறைந்த நெல் ஜெயராமன் அவர்களின் படத்தை எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் தலைவர் பொதுநலச் செம்மல் திரு செந்தூர் பாரி அவர்களும் பங்கேற்கின்றனர்.
அண்மையில் நம்மையெல்லாம் பிரிந்த மறைந்த இயற்கை வழி உழவர்கள் சேஷாத்ரி, கார்த்திகேயன் இவர்களின் படங்களை முறையே திரு.சுப்பு, திரு.செய்யூர் பாலாஜி திறந்து வைத்து புகழுரை ஆற்றுகிறார்கள்.

சென்னை ஈக்வடாஸ் வங்கியின் உயரதிகாரி திரு.ஜான் அலெக்ஸ் அவர்களும், வேளாண் சுற்றுலாவை தமிழ்நாடெங்கும் அறியவைக்க செயலாற்றிக் கொண்டிருக்கும் திரு. அருள் ஜேம்ஸ், மதுரை அவர்களும், ஐயா நம்மாழ்வாரின் தலை மாணவர் தோழர் ஏங்கில்ஸ் ராஜா அவர்களும் மண்வாசனை மேனகா அவர்களும் சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் பழ.செல்வகுமார் அவர்களும், மருதம் வடிவேலன் அவர்களும் பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்க தோழர் காஞ்சி அமுதன் அவர்களும் தமிழின உணர்வாளர் கூட்டமைப்பின் தோழர் செந்தமிழ்க்குமரன் அவர்களும் உழவர் அமைப்பின் இளைஞரணி அமைப்பாளர் திரு மேலூர் அருண் அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
நிகழ்வில் மண்ணியல் அறிஞர் அவர்களின் WORMING my ways நூலை சென்னை மைவழி மனிதி அவர்களும், மரபுவிதைக்காவலர் தோழர் வானவன் அவர்களின் புதின நூலை சென்னை அத்திக்குழு அமிர்தம் சூரியா அவர்களும் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இவ்வாண்டுக்கான ஐயா நம்மாழ்வார் விருதினை உழவர்கள் திருவாட்டி இராணி பட்சிராஜன், செல்வராஜ் அவர்களும் பெறுகிறார்கள். வருகை தரும் இயற்கை வழி உழவர்களின் அனுபவ உரையும் உண்டு. இச்சிறப்புமிக்க நிகழ்வின் நன்றிவுரையை கரிம வேளாண் கட்டமைப்பின் செயலாளர் தனபால் அவர்கள் ஆற்ற உள்ளார்.
சிறப்பான பகலுணவுக்குப்பிறகு தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வேளாண் சுற்றுலா ஏந்துகளை அனைவரும் கட்டணமின்றி துய்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாற்று உடையுடன் வருவது நலம். வாருங்கள் உழவர்களே, உறவுகளே ஐயாவின் நினைவேந்துவோம்.
விளம்பர இணைப்பு; புத்தாண்டில் மிகப்பெரும் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க
1-ம் தேதி வானகத்தில் நினைவேந்தல்
வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப் படுகிறது.
இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்துவருகிறோம்.
அதன்படி வருகிற ஜனவரி1, 2024ல் 10ம் ஆண்டு நம்மாழ்வார் நினைவேந்தல் வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக ஊடகவியலாளர் திரு.சாவித்திரி_கண்ணன் பங்கேற்க உள்ளார்.
Must Read: மரக்கன்றுகள் நட ஏற்ற மாதம் எது தெரியுமா?
நினைவஞ்சலி,பண்ணை பார்வையிடல், மரபு கலை நிகழ்ச்சி, விதை கண்காட்சி, பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி.நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை, யற்கை உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியவை நடைபெற உள்ளன.
https://fktr.in/xletWQb

ஜனவரி 1ம் தேதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை வானகம் – #நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்-621311 என்ற முகவரியில் நிகழ்வு நடைபெற உள்ளது. நிகழ்வில் சிறுதானிய உணவு மதிய உணவாக வழங்கப்படும்.
நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு +91 8668098492, 8668098495, 9445879292 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் வானகம் சார்ந்த பல்வேறு நலப் பணிகளில் தாங்களும் பங்களிக்க, விரும்பும் தொகையை, வங்கிக் கணக்கில் செலுத்தி அந்த தகவலை எங்களுக்கு விருதிற்க்கான நன்கொடை என்பதை குறிப்பிட்டு ) வாட்ஸ் ஆப்/ [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்கொடைகள் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு
Nammalvar Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank : Indian Overseas Bank
Branch : Kadavoor branch, Karur (Dt), Tamilnadu
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு : https://vanagam.org என்ற இணையதளத்தை காணவும்.
தகவல்கள் நன்றி; திரு.இறையழகன், திரு. இரா.வெற்றிமாறன்
#வானகம் – #நம்மாழ்வார் #Nammalwar10thAnniversary
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More