தர்பூசணியின் வெள்ளை நிற சதையிலும் மருத்துவ குணங்கள் இருப்பதை மறந்து விடாதீர்கள்...
தர்பூசணியின் வரவு வந்தாலே கோடை வெளுத்து வாங்கப்போகிறது என்று அர்த்தம் என்பார்கள். தர்பூசணி பழத்தில் அதன் சதைகள் செக்கச்செவேலென இருக்க வேண்டும் என்றும், அதை மட்டுமே ஜூஸாக்கி சாப்பிடுவதையும் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், தர்பூசணியின் தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதையிலும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.
குறிப்பாக ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை அந்த வெள்ளை நிற தர்பூசணி சதைக்கு உள்ளது. வயாகராவைப்போலவே அதிக வல்லமை படைத்தது இந்த தர்பூசணி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது.
அதுமட்டுமல்லாமல் ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யக்கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடியது. மற்ற பழங்களில் இல்லாத சத்துகள் எல்லாம் தர்பூசணியில் உள்ளது. உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுக்கூடியது.
சிட்ருலின் என்ற அரிய வகை புரதம் தர்பூசணியில் இருப்பதால் ரத்த நாளங்களை விரிவடையச்செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும். ஆக, இதய நோயாளிகளுக்கு அருமையான பழம் இது என்பதில் மாற்று கருத்தில்லை. எனவே தர்பூசணி பழத்தை சாப்பிடுபவர்கள் அதன் சிவந்த பாகத்தை மட்டுமல்லாமல் வெள்ளை நிற சதையையும் உட்கொள்ள தவற வேண்டாம்.
-மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#HealthyWatermelon #WatermelonForMedicine
Comments