உளுந்தம் பருப்பில் சூப்பர் ரெசிபி செய்து பாருங்கள்


உளுந்து சத்துமிக்க உணவு பொருள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. உளுந்தின் சுவையும், அதன் தன்மையாலும் இட்லி, வடை போன்றவற்றை நாம் சாப்பிடும்போது அவை பஞ்சு போல மென்மையாக ருசியாக ரசித்துச்சாப்பிடுகின்றோம்.

உளுந்து குழம்பை சாத த்துடன் கலந்து சாப்பிடவும் அல்லது சப்பாத்தியுடன் , தோசையுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். இந்த அருமையான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் தேவையான அளவு கருப்பு உளுந்தை ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த உளுந்தை கழுவி விட்டு, குக்கரில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேக விடுங்கள். பின்னர் அதில் தயிர், பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள், கூடவே அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பச்சை மிளகாய்களை அரைத்து பேஸ்ட் ஆக சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் பவுடர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து பருப்புடன் சேர்த்து கலக்குங்கள். பின்னர் பத்து நிமிடங்கள் இந்த கலவையை வேக வைய்யுங்கள். பின்னர், கொத்தமல்லி தழையை சேர்த்து பரிமாறுங்கள்

இந்த உளுந்து ரெசிப்பியை நாம் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது, போலிக் ஆசிட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நமக்குக் கிடைக்கின்றன. அத்துடன் வைட்டமின் பி சத்தும் கிடைக்கிறது. உளுந்து முழவதும் நார் சத்தும், புரோட்டினும் நிரம்பி இருப்பதால் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

#TrySuperRecipe    #UuradDalKulambu    #UuradDalRecipe 

 


Comments


View More

Leave a Comments