சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு...
எம்பிபிஎஸ் படிப்பு தவிர சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படித்தவர்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, அதுசார்ந்த படிப்புகளை படிப்பதும் சிறந்தாக இருக்கும்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் தமிழ்நாட்டில் அரசின் சார்பில் கல்லூரிகள் உள்ளன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.
Must Read: பாரம்பர்ய சித்தமருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... மூத்த பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியும் உள்ளது. மேற்குறிப்பிட்ட 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இதேபோல, 28 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,820 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
Must Read: யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…
அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கியது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டவுன்லோடு செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன் வரும் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
#Siddha #Ayurveda #Unani #Homeopathy
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments