ஒரே ஒரு மாத சிகிச்சையிலேயே சர்க்கரை கட்டுக்குள் வந்தது எப்படி?
உலக நீரிழிவு தின சிறப்பு பதிவு
இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு
சித்தமருத்துவர் பாஸ்கரனின் சிகிச்சை
உலக அச்சுறுத்தும் தொற்றா நோய்களில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய பங்கு உண்டு. உலக அளவில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் 53.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நீரிழிவு நோய் காரணமாக 10 கோடியே ஒரு 10 லடசம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சித்தமருத்துவர் திரு.பாஸ்கரன் அவர்கள் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது சிகிச்சையால் பலன் பெற்றவர்கள் பலர். மூத்த பத்திரிகையாளர் திரு.கெளதம் அவர்கள் தம்முடைய முகநூலில் சித்த மருத்துவர் பாஸ்கரன் குறித்து எழுதிய பதிவை இங்கே மறுபதிவு செய்கின்றோம்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற ஒரு செய்தியை நண்பர் ரமேஷ்குமார் அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ‘HbA1C 9.5%-ஐயெல்லாம் தொட்டு நடனமாடிக் கொண்டிருந்த அவரது சர்க்கரை 7.8%’ ஆக குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
“சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் தாமதமாகத்தான் பலன் தெரியும் என்பார்கள். ஆனாலும் எனக்கு இரண்டு மாதங்களிலேயே நன்கு மாற்றம் தெரிகிறது. பாஸ்கரனிடம் சிகிச்சைக்குச் செல்லும் நண்பர்கள் பலரும் பயன்பெற்று வருவதைச் சொல்கிறார்கள்” என்றும் தெரிவித்திருக்கிறார் ரமேஷ்குமார். இணைப்பு: https://rb.gy/htgl0
பல நண்பர்கள்.. பல பிரச்னைகள்.. பலப்பல நன்றிகள்! நாளுக்கு நாள் நண்பர்களிடமிருந்து வரும் நன்றி அறிவிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. எல்லாப்புகழும் மருத்துவர் பாஸ்கரனுக்கே! அவர் புகழை அதிகரிக்கும் சித்த மருத்துவத்துக்கே! இத்தனைக்கும் ஆரம்பத்தில் இந்த பாஸ்கரனை நான் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பவில்லை.
Must Read: காய்ச்சலிலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை…
அவரைப் பற்றி தெரியவந்ததும் உடனடியாக சந்தித்தேன். ஆனால் சிகிச்சையேதும் எடுத்துக் கொள்ளவில்லை. சந்தேகப்பார்வையுடன் தான் அவரை அணுகினேன். சித்த மருத்துவம் குறித்து பொதுவான சில கேள்விகளைக் கேட்டுவிட்டு லுலுலுவா சொல்லிவிட்டுத் திரும்பி விட்டேன். ஓரிரு சந்திப்புகளுக்கு பின்னரே அவரிடம் மருந்துகள் வாங்கினேன். அதுவும் என் அம்மாவுக்காகவே.
எனது அம்மாவுக்கு வயது 72. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே மூட்டுவலியாலும் கால்வலியாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ‘வயசாகிடுச்சு, அதான் வலி இருக்கு, குணப்படுத்த முடியாது’ என்றுதான் அலோபதி மருத்துவர்கள் திரும்பத் திரும்ப கூறினார்கள். பாஸ்கரன் கொடுத்த மருந்துகளால் ஓரளவு குணமாகி இருக்கிறார் என ஒரு மாதத்திற்கு முன்பு முகநூலில் பதிவிட்டிருந்தேன்.
அம்மா இப்போது முழுதாக குணமாகி விட்டார்! கட்டுக்கட்டாக வாங்கி வைத்திருந்த கன்னாபின்னா தைலங்களையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டார்! என்னால் நம்பவே முடியவில்லை. பாஸ்கரனின் அதிஅற்புத சிகிச்சையின் மகத்துவத்தை நான் நம்பவேண்டும் என்பதற்காகவோ என்னவோ 'மீண்டும்' என்னைத் தொற்றிக்கொண்டான் சர்க்கரை சகடை.
பல மாதங்களுக்கு முன்பே என்னைப் பற்றியது சர்க்கரை. அப்போதே HbA1C 11.6%. அலோபதி மருத்துவர்கள் பயமுறுத்தினார்கள். ஆனால் நான் ஆங்கில மருந்துகளேதும் எடுத்துக் கொள்ளவில்லை. ஹோமியோபதி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் என அவ்வப்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவு விஷயத்தில் கறாராக இருந்து சமாளித்து வந்தேன்.
பாஸ்கரனை சந்தித்தபோது அவர் சித்த மருந்துகள் கொடுத்தார். அவற்றை எடுத்துக்கொண்டு அடுத்த மாதமே ரத்தப்பரிசோதனை செய்து கொண்டேன். எல்லாம் நார்மல்! பாஸ்கரனுக்கு நன்றி சொல்லி முடித்துக்கொண்டேன்.
அவர் கொடுத்திருந்த அடுத்த மாதத்துக்கான மருந்துகளை மறந்து விட்டேன்! பாதிப்போ அதற்கான அறிகுறிகளோ இல்லாததால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அது நான் செய்த மாபெரும் தவறென்பதை கடந்த மாதம் உணர்ந்து கொண்டேன்.
அடிக்கடி சிறுநீர், கால்களில் அரிப்பு, பாதங்களில் எரிச்சல், உடல் சோர்வு, தினமும் 15 மணி நேரம் தூக்கம், சிறுநீர் கழிக்கும்போது செம எரிச்சல்.. என ஒவ்வொரு அறிகுறியாக அதகளப்படுத்தியதும் ரத்தப்பரிசோதனை செய்து கொண்டேன்.
பரிசோதனை முடிவுகளை கையில் வாங்கியதும் செத்தாண்டா சேகரு என தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.. வேதாளம் மறுபடியும் ரத்தத்தில் ஏறியிருந்தது.. HbA1C 11.7%. “கவலைப்படாதீங்கய்யா, குணமாக்கிடலாம்” என இரண்டு வார்த்தைகளில் ஆறுதல் கூறிய மருத்துவர் பாஸ்கரன் நான்கு வேளைகள் எடுத்துக் கொள்ள மருந்து மாத்திரைகள் கொடுத்தார். சாப்பிட ஆரம்பித்ததும் தினம் ஒரு பிரச்னையாக தொலைய ஆரம்பித்தது! மேலே பட்டியலிட்ட எந்த தொந்தரவும் இப்போது எனக்கில்லை! ஒரே ஒரு மாத சிகிச்சையிலேயே இந்த பலன்.
Must Read: புற்றுநோய் குறித்த 15 முக்கிய கேள்விகளும், பதில்களும்…
மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து எடுத்துக் கொண்டு, இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார் பாஸ்கரன். அந்த பரிசோதனையில் சர்க்கரை சகடை நார்மலுக்கு வந்திருப்பான் என்பதை நான் இப்போதே நம்புகிறேன்.
சித்த மருத்துவர் பாஸ்கரனையும், அவர் கொடுக்கும் சித்த மருத்துவத்தின் அதிஅற்புதங்களையும் நான் முழுமையாக நம்புகிறேன். நாள்பட்ட தீராத நோய்நொடிகளால் அவதிப்படும் நண்பர்கள் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நோய்களைத் தொலைத்து மீண்டு வாருங்கள்.
நான் பாஸ்கரனைப் பற்றி மறுபடியும் மறுபடியும் எழுதும் பொதுநலனுக்குப் பின்னால் எனது சுயநலமும் ஒளிந்திருக்கிறது! ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்களே அப்படி நான் எழுதுவதைப் படித்துவிட்டு பாஸ்கரனைச் சந்திக்கும் நண்பர்கள் குணமடையும் புண்ணியத்தால் எனக்கு வரும் நோய்களெல்லாம் தானே தொலையும் என்ற சுயநலம் தான்!
மருத்துவர் திரு.பாஸ்கரன் எங்கெங்கு சிகிச்சைக்காக வருகிறார் என்பது போன்ற மேலதிக விவரங்கள் புற்றுமகரிஷி சித்த மருத்துவத்தின் முகநூல் பக்கத்தில் உள்ளன, https://www.facebook.com/PutruMaharishiSiddha
-கட்டுரை நன்றி; திரு.ஜி.கெளதம், மூத்த பத்திரிகையாளர்
#worlddiabetesday #diabetestreatment #diabetestreatmentinsiddha
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments