வாரம் ஒருமுறை இறைச்சியை வீட்டில் சமைத்து உண்பது ஆபத்து அல்ல..


இதய நோயாளிகள் ,நீரிழிவு நோயாளிகள் , ரத்த கொதிப்பு நோயாளிகள், சிகப்பு இறைச்சி எனப்படும் கால்நடைகளின்  மாமிசத்தை நம்பகமான கடையில்   வாரம் ஒரு முறை அல்லது இருமுறை வாங்கி வீட்டில் சமைத்து உண்ணலாம். 

என்ன சொல்றீங்க டாக்டர்? 

மட்டன் போன்ற கால்நடை மாமிசத்தில் கெட்ட கொழுப்பு உள்ளதென்றும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதை மருத்துவர் அறிவுரையின் பேரில்  தவிர்த்து வருகிறேன். 

அதனால் பயன் இல்லையா? 

உண்மையில் சிகப்பு இறைச்சியை முழுவதுமாக தவிர்ப்பதில் மருத்துவ ரீதியாக பெரிய பலன் இல்லை. மாறாக அதில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தும் கொழுப்பு சத்தும் கிடைக்காமல் போவது நமக்கு இழப்பே ஆகும். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்

இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் ( கார்டியாலஜிஸ்ட்) தங்களின் சிறப்பு பட்டமேற்படிப்புக்கு பயிலும் முக்கியமான நூலான ப்ரான்வால்டின்  கார்டியோ வாஸ்குலார் டிசீசஸ் நூலின் 11வது பதிப்பில் 49 வது பாடத்தில் 987 வது பக்கத்தில் சிகப்பு இறைச்சி குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

- பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் பதப்படுத்தப்படாத சிகப்பு இறைச்சியும் ஒன்றன்று

- சிகப்பிறைச்சி குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் பெரும்பான்மை பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சி கொண்டே செய்யப்பட்டுள்ளன. 

Must Read: செஃபி வித் ராயர் மெஸ்… வாடிக்கையாளரின் அனுபவ பதிவு

- பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சியை அதிகம் உண்ணும் போது அதில் சேர்க்கப்படும் அதிக அளவு சோடியம் ( உப்பு) மற்றும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் சேர்மானங்களின் விளைவால் இதய நோய் , மூளை ரத்த நாள நோய், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன  

பிரஷ்(பதப்படுத்தப்படாதது) இறைச்சியால் ஆபத்தில்லை

இதுவரை கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவுகளின் படி, பதப்படுத்தப்படாத நிறைவுற்ற கொழுப்பு உள்ள சிகப்பிறைச்சி போன்ற உணவுகள் இதய நோயையோ வேறு வகையான வளர்சிதை மாற்ற நோய்களை உண்டாக்குவது இல்லை. 

சிவப்பு இறைச்சி குறித்து ஆராய்ச்சி

கொழுப்பு இல்லாத சிகப்பிறைச்சியை விட கொழுப்பு இருக்கும் சிகப்பிறைச்சி உடலுக்கு ஆரோக்கியமானது. நீங்கள் கொழுப்பு இல்லாத பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சிக்கு பதிலாக கொழுப்பு உள்ள பதப்படுத்தபடாத சிகப்பிறைச்சியை தேர்ந்தெடுப்பது உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

Must Read: தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…

தற்போது வரை கிடைத்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் அளித்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கால்நடை மாமிசத்தை கடையில் வாங்கி வீட்டில் சமைத்து  உண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

பொருள் விளக்கம் 

பதப்படுத்துதல் - இறைச்சியுடன் அதிக அளவு உப்பு சேர்த்து அல்லது கெட்டுப்போகாமல் இருக்க சேர்மானங்கள் சேர்ப்பது மேற்கத்திய உலகில் சாசேஜ் , ஹாட் டாக் போன்றவை பதப்படுத்தப்பட்ட சிகப்பிறைச்சி வகையாகும்

நம் ஊரில் உப்புக்கண்டம் அதற்கு நிகரானது சிகப்பிறைச்சியை பதப்படுத்தப்படாமல் நாம் உண்பது போல சமைத்து உண்பதில் பிரச்சனை இல்லை என்று ப்ரான்வால்ட் இதய நோய்க்கான சிகிச்சை குறித்த அறிவியல் நூல் எடுத்தியம்புகிறது.

சிகப்பிறைச்சியில் சிறந்த உடலால் எளிதாக கிரகித்துக் கொள்ளக்கூடிய புரதம் சிறந்த இரும்புச் சத்து சிறந்த கால்சியம்  செலினியம் , துத்தநாகம், உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது வாரம் ஒருமுறை அல்லது இருமுறை அச்சமின்றி சிகப்பிறைச்சியை உண்ணலாம். 

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் ,சிவகங்கை

#homecookedmeat #redmeats #meatfoods

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments