செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்களில் நடக்க உள்ள வாழ்வியல் பயிற்சி முகாம்கள்..
சேயோன் இயற்கை வாழ்வியல் அறத்தளம் மற்றும் TREE அமைப்பு இனைந்து நடத்தும் கானகத்தில் குழந்தைகளுக்கான இரண்டு நாள் கலை பழகுதல், இயற்கை உணவுடன் கூடிய இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஆனாது வரும் 26 & 27 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது.
நிகழ்விற்கான பங்களிப்பு தொகை ரூ.1,500/- குழந்தைகளுக்கு ( 6 - 16 வயது வரை) உடன் அழைத்து வரும் ஒரு பெரியவர்களுக்கு - ரூ.1,000/- ( 16 வயதிற்கு மேல் ) என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பகிர்ந்து கொள்ளும் தங்கும் வசதியுடன் பெரும்பகுதி இயற்கை உணவும், குறைந்த அளவு எளிமையான ஆரோக்கிய சமையல் உணவும் வழங்கப்படும். அதிக பட்சம் 25 நபர்கள் மட்டுமே அனுமதி.
Must Read: உடல் எடை குறைப்புக்கான யூடியூப் லைவ் பயிற்சிகள்..
எனவே, தங்களது வருகையை விரைவாக முன்பதிவு செய்யவும். முன்பதிவுக்கு உங்களது பெயர், வயது, ஊர், தொடர்பு எண் அனுப்பி வைத்து உறுதி செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு +91 83007 03777 என்ற அலைபேசிக்கு, வாட்ச்அப் மூலம் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்தவர்கள் வரும் 26, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் ( STR - Sathyamangalam Tiger Reserve ) பகுதியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக திம்பம் மலை பாதையில் ஏறிவரும் போது ஆசனூர் அருகே கொள்ளேகால் செல்லும் சாலையில் அமைந்துள்ள மலை கிராமமான அரேப்பாளையம் ( MYRADA - CIDORR ) என்ற இடத்திற்க்கு வந்து விட வேண்டும்.
நிகழ்வு நடக்கும் இடத்தின் ( GPS Location )
MYRADA- CIDORR, · M44Q+2RQ, Arepalayam,Talamalai R.F., Tamil Nadu, Talamalai R.F.
M44Q+2RQ, Arepalayam,Talamalai R.F., Tamil Nadu, Talamalai R.F. https://maps.app.goo.gl/4KkbVgt38hLQadhe9
26ஆம் தேதி காலை 11.00 மணிக்கு வரவேற்புரை & நோக்கவுரை, குழந்தைகள் அறிமுகப்படுத்தி கொள்ளுதல், பாடல்கள், கதைகளுடன் நிகழ்வு தொடங்க உள்ளது. நிகழ்வின் இறுதியாக ஆகஸ்ட் 27, ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 PM பசுமை நீங்கா நினைவுகளுடன் விடை பெறுகிறோம்.
மூலிகைகள் வாயிலாக உடல் நலன் பயிறசி
நமது மண்ணின் மருத்துவம் மூலம் நமக்கு வரக்கூடிய உடல்நலக்குறைபாடுகளை மிக எளிதாக விரட்ட முடியும். சில நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உங்களது பிரச்சினைகளுக்கு நீங்களே தீர்வுகாண வழிகள் இருக்கின்றன.
அந்தவகையில் நம்மைச்சுற்றி வளரக்கூடிய மூலிகைகளை அடையாளம் காண்பதுடன் அவற்றைக்கொண்டு நமக்கு வரக்கூடிய உடல்நல பாதிப்புகளை போக்குவது குறித்து நேரடி பயிற்சி வகுப்புகள் வழியாக கற்றுத்தருகிறேன்.
Must Read: எண்ணற்ற உயிர்களைக் காக்கும் வெளி உலகம் அறியாத கதாநாயகர்கள்…
அடுத்த மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 9-ந்தேதி மூலிகை இனங்காணல் மற்றும் அவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்துவது என்பதுகுறித்து சொல்லித்தர இருக்கிறேன்.
அத்துடன் இந்தமுறை முற்றிலும் இயற்கைச்சூழலில் இந்த பயிற்சி அமையவிருக்கிறது. அவரவர் பிரச்சினைகளுக்கு தகுந்தவாறு புற்றுமண்ணுடன் சில மூலிகைகளைக் கலந்து பூசி சூரியக்குளியல், பம்ப்செட் குளியல் என மகிழ்ச்சியான - ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தலாம் என்றிருக்கிறேன்.
செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஐயா இறையழகன் அவர்களின் தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. ஏற்கெனவே சிலர் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
தேதி முடிவாகியிருப்பதால் தங்களது வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உணவு மற்றும் பயிற்சிக்கான தொகை ரூ. 1000. மேலும் விவரங்களுக்கு 095514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#healthylifestyle #learnhealthylifestyle #lifestyletraining
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments