எண்ணற்ற உயிர்களைக் காக்கும் வெளி உலகம் அறியாத கதாநாயகர்கள்…
ஒரு நாள் ஒரு சிறுவனை அவன் அப்பா தூக்கிவந்தார். கீழ விழுந்து நாக்குல அடி பட்டுடுச்சுனு சொன்னார். சரி படுக்க வைங்க என்று சொன்னேன் பார்த்தால் , பெரிய வெட்டு போல் காயம் வாய் முழுவதும் ரத்தம் உறைந்து போய் இருந்தது.
என்ன ஆச்சு என்று கேட்டேன். காலையில் நடந்தாக சொன்னார் , இரண்டு மருத்துவமனைக்கு சென்றதில் கால தாமதம் குழந்தை பார்க்க சுய நினைவை இழப்பது போல ஒரு மாதிரி தெரிந்தது பல்ஸ் ஆக்ஸிமெட்ர் பார்த்தால், ஆக்சிஜன் அளவு 75% காட்டியது உடனே அறுவை அரங்கிற்கு மாற்ற சொன்னேன் வார்டு உதவியாளர் தூக்கி கொண்டு ஓடினார்.
Must Read: வேலூரில் நாளை சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம்
அறுவை அரங்கில் , மயக்க மருந்து நிபுணர் , சிசேரியன் அறுவை சிகிச்சையில் இருந்தார் , நிலைமை சொன்ன வுடன் உடனே வந்தார் குழந்தையை அறுவை அரங்கிற்கு மாற்றினார். சில மருந்துகளை நரம்பில் ஏற்றினார்.
பிராண வாயு செலுத்தினார் , மூக்கிற்குள் ஒரு குழாயை செலுத்தி நுரையீரலில் உறைந்து போன ரத்த கட்டிகளை எடுத்தார். சில நிமிடங்களில் வாய் வழியாக நுரையீரலுக்கு ஒரு குழாய் யை செலுத்தி செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பித்தார்
ஆக்சிஜன் 100% காட்டியது. மறுபடியும் சில மருந்துகள் செலுத்தினார் , அந்த சிறுவன் உடல்நிலை அவரது முழு கண்ட்ரோலில் வந்தது பிறகு வாயில் இருந்த காயத்தை பார்த்தார். என்னிடம் " you can suture it now Prakash “ என்றார்
சில நிமிடங்களில் நான் தையல் போட்டேன். ரத்த போக்கு நின்றுவிட்டது மீண்டும் சில மருந்துகள் ஏற்றி , வாயில் இருந்த குழாயை வெளியில் எடுத்தார் சிறுவன் கண் விழித்து தானாக மூச்சு விட்டான்
என்ன நடந்தது என்றால் , நாக்கில் இருந்து ரத்த கசிஞ்சு நுரைஈரலில் அடைத்து விட்டது. இது கிட்ட தட்ட தண்ணீரில் முழுகும் நிலை. மயக்க மருந்து நிபுணர் அதை சரி செய்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணரின் வேலை வெறும் நாலு தையல் மட்டுமே . அவனை காப்பாற்றியது மயக்க மருந்து நிபுணர் தான்
“கொஞ்ச நேரம் இங்க இருக்கட்டும். நான் பார்த்துட்டு வார்டுக்கு அனுப்புறேன்,"என்றார் நான், ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்றேன் அதற்கு மயக்க மருந்து நிபுணர் "ஓகே பிரகாஷ் " என்று சொல்லிவிட்டு அடுத்த அவசர சிகிச்சை சிசேரியன் கேஸ் கவனிக்க சென்று விட்டார்.
Must Read: எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரகம் பாதிக்கப்படுவது அதிகரிப்பா?
அந்த சிறுவனின் பெயர் ,ஊர் எதுவும் தெரியாது இது போல மயக்க மருந்து நிபுணர்களால் காப்பாற்றப்பட்ட நூறு பேரை பார்த்திருக்கிறேன் அவர்கள் யாருக்கும் மயக்கமருந்து நிபுணரின் பெயரோ முகமோ கூட தெரியாது
பெரும்பாலான icu கள் மயக்க மருந்து நிபுணர்களால் தான் கண்காணிக்கபடுகின்றன மயக்கமருந்து நிபுணர்கள் அவ்வளவாக வெளியே தெரியாத unsung heroes.
-டாக்டர் பிரகாஷ், அறுவை சிகிச்சை நிபுணர், தஞ்சை
#worldanaesthesiaday2023 #importantofanaesthesia #anaesthesia
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments