சென்னை, கோவையில் 8 ஆம் தேதி இயற்கை வேளாண் நிகழ்வுகள்…


சென்னையில் இயற்கை சந்தை திருவிழா வரும் 08ஆம் தேதி ஞாயிறு அன்று  தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின்போது  அடுப்பில்லா சமையல்,  ஆரோக்கிய உணவு தயாரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது. 

சமையற்கலை வல்லுநர் கும்பகோணம் ரமேஷ் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி வழங்குகிறார். பயிற்சி கட்டணமாக ரூ.400 வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க  7448558447, 9566667708 .ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யலாம். 

இந்த நிகழ்வு தவிர தாய்வழி அக்குபஞ்சர் மையம் சார்பில் இலவச அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. மேலும் மாடித்தோட்ட பராமரிப்பு ஆலோசனைகள் குறித்து மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திரு. வெற்றிமாறன்.இரா அவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்.
Must Read:இங்கிலாந்தில் இந்தியபாணி உணவு விநியோகம்

சந்தை நிகழ்வில் தன்னார்வலர்களாக பங்காற்ற விரும்பும் நண்பர்கள் அழையுங்கள் 9566667708 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

தூய இயற்கை உணவுகள், காய்கறி - கீரைகள் - பாரம்பரிய அரிசிகள் - சீர்தாணியங்கள் - பருப்பு வகைகள் - சமையல் பொடி வகைகள் - குழந்தைகளுக்கான மரபு திண்பண்டங்கள் -  சமையல் மண்பாண்டங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும், துணி பைகள் - சணல் கைவினை பொருட்கள் - பனை ஓலை பொருட்கள் - சிற்பங்கள் - ஓவியங்கள் என இயற்கை சார்ந்த    பொருட்களின் நேரடி விவசாயிகளும் மதிப்புக்கூட்டு உற்பத்தியாளர்களுமாக ஒருங்கிணைந்த ஆர்கானிக் விற்பனை சந்தை நடைபெற உள்ளது. 

தாம்பரத்தில் இயற்கை வேளாண் வாழ்வியல் பயிற்சி

வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளி , ஜி.எஸ்.டி சாலை, தாம்பரம் மேற்கு ( பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில்) , சென்னை என்ற முகவரியில் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு.  வெற்றிமாறன்.இரா அவர்களை : 9566667708 ,  7448558447 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

Must Read: செல்ஃபி வித் ராயர் மெஸ்… வாடிக்கையாளரின் அனுபவ பதிவு

சமைக்காத உணவுகள் தயாரிப்பு பயிற்சி 

இயல்வாகையின் சமைக்காத உணவுகள் தயாரிப்பு பயிற்சி வரும் 8 ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சியில் வாழைப்பழ ஸ்மூதி, வெண்பூசணி மில்க் ஷேக், செம்பருத்தி சக்தி பானம், அவல் பொங்கல்,காய்கறி கலவைச்சோறு (Mixed Veg Rice), தேங்காய்ப்பால் தயிர் சோறு, கேரட்லட்டு, விதைகள் கலவைச்சோறு (Seed Rice) ரோஸ்மில்க், பசுமஞ்சள் பால் ஆகியவற்றை செய்வது குறித்த பயிற்சிகள் செய்முறையும் விளக்கவுரை இடம் பெறுகிறது. 

திருமதி.நிர்மலா ஸ்ரீ அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார். 8ஆம் தேதி  ஞாயிறு நேரம் : காலை 11 மணி முதல் 1 மணி வரை பயிற்சி நடைபெற  உள்ளது. "நம்ம ஊரு சந்தை ", மாநகராட்சி பள்ளி, கிராஸ்கட் ரோடு,பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம்,காந்திபுரம், கோவை என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு  9942118080, 94457 20620 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். 

 #chennaievents #thambaramevents #coimbatoreevents #lifestyleevents #organicagrievents

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments