மும்பையின் டப்பாவாலா லண்டனில் டப்பா டிராப்…இங்கிலாந்தில் இந்தியபாணி உணவு விநியோகம்!


லண்டன் வாழ் இந்தியர்களுக்காக ஒரு புதிய முயற்சி உருவாகியுள்ளது, அவர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. லண்டன் தெருக்களில்  டப்பாவாலாக்களின் சேவை இருக்குமா என்ற அவர்கள் எதிர்பார்ப்பும் எண்ணமும் நிறைவேறி இருக்கிறது என்பதே அங்கு வசிக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உற்சாகத்தை அதிகரிக்க போதுமானதாக இருக்கிறது.  

இந்தியாவில் அலுவலகம் செல்வோர் அடுக்கு டிபன் பாக்ஸ்களில் மதிய உணவை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம். மும்பையில் அலுவலகம் செல்வோருக்காக டப்பா வாலாக்கள் என்ற முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அலுவலகம் செல்வோரின் வீடுகளில் அவர்களின் குடும்பத்தினர் சமைக்கும் உணவை அடுக்கு டிபன்பாக்ஸ்கள் மூலம் அலுவலகங்களுக்கு சென்று விநியோகிக்கும் பணியில் டப்பா வாலாக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையின் இந்த டப்பாவாலாக்கள் போலவே இப்போது லண்டன் தெருக்களில் ஏராளமான பைகளுடன் சிலர்  சைக்கிள் ஓட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. DabbaDrop என்ற உணவு விநியோகச் செயலி மும்பை பாணியில் ஒரு விநியோக முறையை லண்டனில் மேற்கொண்டுள்ளது. அது, இந்தியாவின் குறிப்பாக மும்பையின் டப்பா வாலாக்கள் என்ற வேர்களை  அப்படியே அது தக்க வைத்திருந்தது. 

Must Read: செல்ஃபி வித் ராயர் மெஸ்… வாடிக்கையாளரின் அனுபவ பதிவு

டப்பா டிராப் என்பது மும்பையைச் சேர்ந்த அன்ஷு அஹுஜா மற்றும் அவரது நண்பரான ரெனி வில்லியம்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். மும்பையில் இருந்து டப்பாவாலா யோசனையை எடுத்து லண்டனுக்கு ஏற்றதாக மாற்றி கொடுக்கின்றனர். 

டப்பா டிராப் உணவு விநியோக செயலி

அவர்கள் மெனுவில் இந்திய, ஜப்பானிய, வியட்நாம் மற்றும் பல நாடுகளின் உணவு சுவைகள் உள்ளன. ஆலு டக்கிலிருந்து பாம்பே சாண்ட்விச் முதல் பேபி கத்தரிக்காய் ரீசேடோ வரை கிரீன்ஸ் கோமா-ஷோகா வரை என மெனு ஒவ்வொரு வாரமும் மாறும்.

மும்பையில் நீங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களில் உணவு விநியோகம் செய்வது போல டப்பா டிராப் செயலியில் இங்கிலாந்திலும் அதே போன்ற பாத்திரங்களில் அற்புதமாக வீட்டில் சமைத்த உணவை வழங்குகின்றனர். இப்போது, இந்தியர்கள் லண்டனில் இருந்து வெகு தொலைவில் பணியாற்றுகின்றனர். எனவே, டப்பா டிராப் மூலம் அந்த வழக்கமான இந்திய சுவை அவர்களின் நாவின் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துகிறது. 

Must Read: தொழில் அறமின்றி கெட்டுப்போன இறைச்சியில் ஷவர்மா செய்ய வேண்டாம்…

டப்பா டிராப் செயலியில் பதிவு செய்த பிறகு, டெலிவரியை திட்டமிட வேண்டும். உங்கள் தேவைகளைப் பொறுத்து வாராந்திர அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர்கள் டெலிவரி செய்கின்றனர். ஆர்டர்களுக்கு ஏற்றபடி தொழில்முறை சமையல்காரர்கள். வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு வழங்குவதை உறுதி செய்கிறார்கள்.

உணவு வீணாவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதைப் போலவே, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்சல்களை விநியோகிக்கும்போது காற்றை மாசுபடுத்துவது குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, டப்பா டிராப் முறையில் சைக்கிளில் லண்டனில் உங்கள் வீட்டு வாசலில் சூடான உணவை வழங்குகிறார்கள். 

DabbaDrop உண்மையில் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுபயன்பாட்டு டப்பாக்கள் முதல்  கழிவுகள் அற்ற நிலை என டெலிவரிக்கான சுழற்சிகள் வரை, இது ஒட்டுமொத்தமாக ஒரு  சிறந்த முயற்சியாகும்.இப்போது, ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு இரவு உணவிற்கு என்ன சாப்பிடுவது என்று யோசிக்க வேண்டியதில்லை. அதை டப்பா டிராப் உங்களுக்கு விநியோகம் செய்கிறது. அருமையான உணவை ருசிப்பது மட்டுமே வாடிக்கையாளர்களின் வேலையாக இருக்கிறது. 

-ரமணி

#dabbadroplondon #dabbadrop #dabbawala #dabbawalamumbai 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments