பேரனுபவத்துடன் நிறைவடைந்த இயற்கை வேளாண்மை பயிற்சி


தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் தென்காசி அருகிலுள்ள பொதிகை சோலையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி பேரனுபவத்துடன் இனிதே நிறைவானது .

இயற்கை வேளாண்மையின் தத்துவம், வேளாண் அரசியல், வரலாறு, அறிவியல் நுட்பங்கள் என அடிப்படையான கூறூகளையும் , ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு முறைகளையும் நீர் மேலாண்மை நுட்பங்களையும் அடர்த்தியாக வகுப்பெடுத்தார் ஐயா பாமயன் அவர்கள். 

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையின் உயிர் பன்மயம், பயிர் மேலாண்மை பூச்சி கட்டுப்பாடு மற்றும் இயற்கை இடுபொருட்கள் பயண்பாடு, பாத்தி அமைப்பு மண் வலம்  குறித்த கள வழி பயிற்சியாக பயிற்சியளித்தேன் 

Must Read: டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு… இனி செய்ய வேண்டியது என்ன?

பன்மயமான மரங்களும் அதன் பயன்பாடு குறித்தும் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்தும் பொதிகை பண்ணையின் ராஜசேகர் அவர்கள் செய்முறை பயிற்சி வழியே விளக்கினார்.

India doesn't need mass production.. India need production by masses எனும் காந்திய சிந்தனையுடன் தன் வாழ்வை பொருத்திக்கொண்ட பொதிகை சோலையின் கைத்தறி நெசவாளர் நண்பர் சரவணன் கைத்தறி நெசவும் அதன் செழித்த நுட்பங்கள் உழைப்பு முறை, உடை ஆரோக்கியம், அரசியல், சூழலியல் பாதுகாப்பு என பருத்தியில் துவங்கி ஆடையாகும் வரையிலான தனது வாழ்வின் செயல் வழி அனுபவங்களை அருமையாக எடுத்துரைத்தார் . 

இனிதே நிறைந்த பயிற்சிமுகாம்

கைத்தறி நெசவாளர் நண்பர் பொன்மாரிமுத்து தானே நெய்த இயற்கை சாயமிடப்பட்ட கைத்தறி சேலைகளை காட்சிபடுத்தி கைத்தறி நெசவின் சிறப்பினையும் அவசியத்தையும் எடுத்துரைத்தார் .

கழிவுகள் என்பது இடம் மாறி கிடக்கும் ஆதாரங்கள் ஆகவே ஆதாரங்களை சரிவர கையாள கற்றுக் கொண்டோமெனில் கழிவுகள் என்றெதுவுமில்லை என்னும் ஐயா நம்மாழ்வாரின் தர்சார்பு தடத்தில் பயணிக்கும்  "தெங்கம் craft" முத்துராஜ் தனது விருப்பங்களை வாழ்வாக்கி நண்பர் ஆணந்தபெருமாள் வழியே தேங்காய் சிரட்டைகளில் கைவினை பயன்பாட்டு பொருட்களை உறுவாக்குவது குறித்து விளக்கினார். 

Must Read: மாடித்தோட்டம் அமைக்க வேண்டுமா? தோட்டக்கலை துறை வெளியிட்ட அறிவிப்பு...

இதனுடன் சிரட்டைகளில் உருவங்களை அசலாக வடிப்பது மற்றும் முப்பரிமாண உருவ வடிவமைப்புகளை தேங்காய் இளநீர் ஓடுகளை கொண்டே வடிவமைப்பதென ஆகச் சிறந்த கலைஞனாக தனது  வாழ்வனுபவங்களை பகிர்ந்து தான் உருவாக்கிய கலை பொருட்களை காட்சி படுத்தினார்.

மரபு விதை பன்மயம் குறித்தும் விதை வழி பயணம்  இயற்கை வேளாண்மை அனுபவங்களையும் தாய்மண் பிரதீப் குமார் பிரதீப் பகிர்ந்து கொண்டார்.

பொதிகை சோலையில் மரபு சுவை மிகுந்த சிறப்பான உணவினை படைத்து எல்லோரையும்  வயிறார மனதார உணவு பரிமாறிய திருமதி   ராஜசேகர் மற்றும் பொதிகை சோலை பணியாளர்கள்  தன்னார்வல நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் பிராயங்களும். இந்நிகழ்வை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு பொறுப்பாளர்களிள் அயராது ஒருங்கிணைத்து உழைக்கும் நண்பர் கார்த்திக் குணசேகர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார்.

- வள்ளுவம் வெற்றிமாறன்.இரா

 #organicagritrainingcamps #agricultureonedaytraining #agritraining 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments