ராகுல் காந்தியின் தமிழக சமையல் அனுபவம்...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் எம்.பி., ஜோதிமணியின் ஏற்பாட்டின் பேரில் வில்லேஜ் குக்கிங் யூ டியூப் வீடியோ சேனலின் சமையல் குழுவில் பங்கேற்று காளான் பிரியாணி சமைக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் திடீரென களமிறங்கி பிரியாணிக்கான வெங்காய ரைத்தாவை தயாரித்து அசத்தினார். சமையல் குழுவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் உரையாடினார். இங்கே அந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப் பார்க்கலாம். வீடியோ நன்றி ; Village Cooking Channel
Comments