வாதுமை கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


வாதுமை கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
அக்ரூட், வால்நட் என்றெல்லாம் அழைக்கப்படும் வாதுமை கொட்டை பல்வேறு பயனுள்ள சத்துகளைக் கொண்டுள்ளது. 
வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஊட்டசத்தாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுகின்றன. வாதுமை பருப்பில் உள்ள ஒமேகா-3 என்ற சத்தானது இதய நோயாளிகளுக்கு நோய் அபாயத்தின் தன்மையை குறைக்கின்றன. 
இதயத்துக்கு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்துக்கும் வாதுமை நல்லது. குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வாதுமை உதவுகிறது. குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்வதை உறுதி செய்யும் வாதுமையானது. குடலின் செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. 
வாதுமையில் உள்ள டிஎச்ஏ எனும் ஒமேகா 3-வகை அமிலமானது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளையின் அறிவாற்றலை மேம்படுத்த இது உதவுகிறது. வயது முதிந்தவர்களுக்கு நினைவு திறன் குறையும் போது வாதுமை சாப்பிடும்படி பரிந்துரைப்பதற்கான காரணம் இதுதான். 
வாதுமையில் உள்ள நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் என்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க விரும்புவர்கள் வாதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். வாதுமையில் உள்ள நார்சத்து உங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. 
வாதுமையில் உள்ள செலினியம் , வைட்டமின் பி7 ஆகிய சத்துகள் முடி உதிர்வை குறைக்கின்றன. வாதுமை பருப்பை அப்படியே சாப்பிடாமல், வாதுமை எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியமாக, பளபளப்பாக வளர்வதை உறுதி செய்யலாம். 
வாதுமையில் வைட்டமின், தாது சத்துகள் அதிக அளவில் உள்ள டைப் 2 நீரழிவு நோயைத் தடுக்கிறது. வாதுமையில் உள்ள சத்துகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. 


Comments


View More

Leave a Comments