கொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு


 

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் உணவு விநியோகத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமின்றி, யாருக்கும் பயனின்றி உணவும் வீணாகிறது.

1.வீணாகும் பால்

மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தினமும் லட்சணக்ககான லிட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்போது ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தேநீர் கடைகள், காஃபி ஷாப் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால், பால் வாங்குவதற்கு ஆட்கள் இன்றி வீணாக கீழே கொட்டப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் இப்போது நாள் ஒன்றுக்கு 1.40 கோடி லிட்டர் பால் கீழே கொட்டப்படுகின்றது. இங்கிலாந்தில் வாரம் தோறும் 50 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது.

2.வீணாகும் வேளாண் பயிர்கள்

ஊரடங்கு கால முடக்கமானது விவசாயத்தை முழுமையாகப் பாதித்துள்ளது. நெற்பயிர்கள், கோதுமை ஆகியவை அறுவடை செய்ய ஆட்கள் வராத தால் பல லட்சம் தானியங்கள் வீணாகிவிட்டன. பூக்கள் பறிக்க ஆள் இல்லாத தால், செடிகளிலேயே மலர் வாடி வதங்குகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சகணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை.

3. சேமித்து வைக்கும் வசதிகள் இல்லை

விவசாயிகள் தாங்கள் விளைவித்த உணவுப் பொருட்களான நெல் போன்றவற்றை சேமித்து வைக்கும் கிடங்கு வசதிகளை கொண்டிருப்பதில்லை. அறுவடை செய்த தும் களத்தில் இருந்து நேரடியாக விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் விவசாயிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

அரசின் கொள்முதல் நிலையங்கள், தனியார் மண்டிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் விளைவித்த உணவு தானியங்களை சேமிக்க முடியாமல், மழையிலும், வெளியிலும் அவை அழிவதைக் கண்டு விவசாயிகள் தினந்தோறும் கவலையில் உறைந்துள்ளனர்.

#covid19 #coronavirus #lockdown #milkwaste #foodwaste  #food #milk


Comments


View More

Leave a Comments