உணவு விநியோகத்தின் வித்தகர்கள்


 

கஞ்சி என்றாலும் அதை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது என்பதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்களின் உணவுப் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பழைய சோறு கூட ரெஸ்டாரெண்ட் மெனுவில் இடம் பிடித்து விட்டது.

ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவு விநியோகிக்கும் செயலிகளில் ரெஸ்டாரெண்டை தேர்வு செய்து பழைய சோறைக் கூட ஆர்டர் செய்து வாங்கி உண்ணும் நிலைக்கு வந்துவிட்டோம்.

காரணம் அவசரம், அவசரம் என்பதுதான். அமெரிக்கா ஷிப்ட், இங்கிலாந்து ஷிப்ட் என்று தமிழகத்தில் இருந்தபடியே வெளிநாட்டு நேரத்துக்கு ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு தூங்குவதற்கும் நேரம் இல்லை. சமையல் செய்வதற்கும் நேரம் இல்லை.

இவர்களுக்கு கை கொடுப்பது ஸ்விக்கி, சொமோட்டோ செயலிகள்தான். பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் நள்ளிரவு தாண்டியும் தொலைகாட்சிகளிலோ, ஸ்மார்ட் போன்களிலோ திரைகளை விழிவிரிய பார்த்து விட்டு, தூங்குவது குறைந்த நேரம்தான். அல்லது தூங்குவதே இல்லை. இந்தநிலையில் எங்கே சமைப்பது. அவர்களுக்கும் கை கொடுப்பது இந்த செயலிகள்தான்.

ஏறக்குறைய சமையலறையையும், சமையல் செய்யும் பழக்கத்தையும் மறந்தவர்களுக்கு இப்போது கொரோனா தாக்கத்தின் காலம் மீண்டும் வீட்டு சமையலை மீட்டெடுத்திருக்கிறது எனலாம். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. இது வரவேற்க தக்க ஒன்றுதான். கொரோனா காலம் முடிந்த பிறகும் இது நீடிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு வீட்டு சமையல் கைகொடுக்கிறது. எனினும் தனிமையில் இருக்கும் முதியவர்கள், பேச்சிலர்கள், கொரோனாவால் இடம் பெயரமுடியாமல் மாநகரங்களில் தன்னந்தனியே தவிப்பவர்களுக்கு கைகொடுக்கும் வரபிரசாதமாக இருப்பது உணவு விநியோகிக்கும் செயலிகள்தான்.

சாதாரண நாட்களை விடவும், கொரோனா காலத்தில் இவர்களின் பணி அளவிடமுடியாத து.

ஸ்விக்கி நிறுவனம் தமது ஊழியர்களிடம் சுத்தம், சுகாதாரத்தைப் பேணும்படி அறிவுறுத்தி உள்ளது. எத்தனைமுறை எப்படி கைகளை கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை ஸ்விக்கி அறிவுறுத்தி உள்ளது.

ஒருவேளை தங்களது ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே தங்கள் மேல்அதிகாரிகள் அல்லது நிறுவனத்தின் மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.  ஒருவேளை கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் ஸ்விக்கி உறுதி அளித்துள்ளது.

நன்றாக பாதுகாப்பாக பார்சல் செய்யப்பட்டிருக்கிறதா என்று உணவகங்களில் கண்காணித்து அவற்றை மட்டுமே வாங்கி விநியோகிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் நோய் தொற்று அறிகுறிக்கு உட்பட்டிருந்தால்,அவர்கள் உணவு விநியோகிப்பாளரிடம் நேரடியாக உணவைப் பெற வேண்டியதில்லை. அவர்கள் வீட்டு வாசலில் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


Comments


View More

Leave a Comments