வாய்ப்புண்ணுக்கு வரமாக வந்திருக்கும் பூசணிக்காய்...


 

பூசணிக்காய் என்று சொன்னதுமே குண்டான உடல்வாகு உள்ளவர்களைப்பார்த்து கேலி, கிண்டலுக்கான வார்த்தையாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், பூசணிக்காயின் மகத்துவம் தெரிந்தவர்கள் இனி அப்படி பேசமாட்டார்கள். குறிப்பாக, வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி மட்டுமல்லாமல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

 

அல்சர் எனப்படும் வயிற்றுவலியால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் பூசணிச்சாறு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றுப்புழு தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் வெள்ளைப்பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் புழுக்கள் வெளியேறுவதோடு வயிற்றில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். இதேபோல் வெள்ளைப்பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடல் சூட்டை தணியச்செய்யும்.

 

மேலும் சிறுநீரகத்தொற்று, அல்சர் மற்றும் மூல நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தக்கசிவு குறைபாட்டை சரி செய்யக்கூடியது. இது மட்டுமல்லாமல் நரம்புத்தளர்ச்சி, மேகநோய்கள், மனநலக்கோளாறுகளை வெள்ளைப்பூசணி சரி செய்யக்கூடியது.

 

வெள்ளைப்பூசணிக்காயின் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சதை பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மையாக அரைத்து அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து ஜூஸாக குடித்து வந்தாலும் மேற்சொன்ன பலன்கள் கிடைக்கும். இதே பூசணிக்காயின் சதை பகுதியுடன் சர்க்கரை சேர்த்து அல்வா அல்லது லேகியமாக்கி சாப்பிடுவதாலும் பலன் கிடைக்கும்.

-மரியபெல்சின்

#PumpkinSeed #PumpkinSeedsForMouthUlcers  #MouthUlcers  

 


Comments


View More

Leave a Comments