பீரியட்ஸின் போது உண்ணவேண்டிய உணவுகள்...


கால்சியம் மற்றும் ஒமேகா 3 நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவுகளை உட்கொள்வது நல்லது. இயற்கையை அடிப்படையாக க் கொண்ட உணவு முறைகளே பீரியட்ஸ் காலகட்டத்துக்குப் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். 
பீரியட்ஸின் போது உணவு உண்ணுவதைத் தவிர்க்கக்கூடாது. சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை உலர் பழங்கள், பாதாம், முந்திரி போன்ற சத்தான பொருட்களை உண்ணலாம். 
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு உண்ணவும். சாப்பாட்டுடன் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடிக்கவேண்டும். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து தண்ணீர் நிறையக் குடிக்கலாம். 
பீரியட்ஸ் எனும் மாதாந்திர சுழற்சியின்போது பெண்கள் சோர்வடைவது, வயிற்று வலி போன்றவற்றால் அவதிப்பட நேரிடும் அவர்கள் இதுபோன்ற உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் பீரியட்ஸ் வலியிலிருந்து தற்காலிக தீர்வு காணலாம்.
 

Comments


View More

Leave a Comments