வீட்டிலேயே நெய் எப்படி தயாரிப்பது என்று தெரியுமா?


வீட்டிலேயே சுத்தமான நெய் எடுக்கிறது எப்படின்னு சொல்லித் தரேன். ஒரு disclaimer: வீட்டில் மாடு வளர்ப்பவர்களிடம் வாங்கும் பாலில் தான் நல்லா வரும். பாக்கெட் பால் இதற்கு உதவாது. 

ஒரு நாளைக்குத் தேவையான பாலை மொத்தமா வாங்கி காய்ச்சி ஆற விட்டு fridge ல வச்சிடணும். மறு நாள் காலையில ஆடை பெரிய படலமா படர்ந்திருக்கும். அதை தனியா எடுத்து சேகரிக்கணும். ஆடை எடுத்த பாலை பயன்படுத்திக்கலாம். இப்படி  பத்து நாள் சேர்த்து fridge ல் வைத்து எடுத்த ஆடை.

Must Read: வீட்டுத்தோட்டம் குறித்து ஒரு மாத இணைய வழி பயிற்சி மார்ச் 1ஆம் தேதி தொடக்கம்… .

சேர்த்து வைத்த ஆடையை வெளியே எடுத்து கொஞ்ச நேரம் கழிந்ததும்  உரை குத்துவது போல நிறைய மோர் விட்டு கலந்து வைக்கணும். அதன் பின் ஒரு ரெண்டு நாள் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து  தேவையான தண்ணீர் விட்டு மிக்ஸியில் அடித்தால் இரண்டே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு வந்துடும். 

வீட்டில் நெய் தயாரிப்பது எப்படி தெரியுமா?

வெண்ணெயை வாணலியில் இட்டு high flame ல் கிண்டி கொடுத்துக் கொண்டே இருக்கணும். வெண்ணெயிலிருந்து நெய் பிரியத் தொடங்கும். அப்போ அடுப்பை குறைத்து சிம்மில் வைக்கவும். நெய் நன்றாக பிரிந்து வரும். கிண்டி விட்டுக் கொண்டே இருக்கணும். 

நெய்யின் நிறம் லேசாக ப்ரவுனாக மாறி வரும் போது இரண்டு கல் உப்பு நாலைந்து மிளகு கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு இறக்கவும். ஒரு பாத்திரத்தை நன்கு துடைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். 

இப்போது நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்குப் போகும் போது இப்படி சுத்தமாக தயாரித்த நெய்யைக் கொண்டு செல்வதால் என்னை "நெய்காரப் பாட்டி" ஆக்கி விட்டார்கள். பலர் பேர் சொல்லி பல முறைகளில் தயாரித்துப் பார்த்திட்டேன். இந்த முறை நல்லா செட் ஆகிடுச்சு. அதிகமான அளவில் நெய் கிடைக்கிறது.

Rufina Rajkumar

#HowtoprepareGheeinhome  #PrepareGheeinhome #HealthyGhee


Comments


View More

Leave a Comments