அசிடிட்டி பிரச்னை ஏற்படாமல் இருக்க இந்த உணவு பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்


அசிடிட்டி பிரச்னையால் நமது செரிமானம் பாதிக்கப்படுகிறது. செரிமானம் இல்லாவிட்டால் பல நோய்களுக்கு அது வழிவகுக்கும். அசிடிட்டி பிரச்னையை நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களை கொண்டே தீர்த்துக் கொள்ளலாம்.

தினமும் நாம் சாப்பிட்ட பின்னர் ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட வேண்டும். அதே போல ஒரு டீ ஸ்பூன் சோம்பை வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் மறுநாள் காலையில் அதனை வடிக்கட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் துளசி இலையை மென்று அப்படியே அதை சாப்பிட வண்டும் அல்லது துளசி இலையில் தேநீர் தயாரித்து அதனை தேன் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

தினமும் 10 முதல் 12 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். குடிக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தால் மிகவும் நல்லது.

தினமும் மோர் குடிக்க வண்டும். மோருடன் மிளகு, கொத்தமல்லி சேர்த்து சாப்பிடலாம்.


Comments


View More

Leave a Comments