குழந்தைகளுக்கு வரும் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்ப்பது எப்படி?
வளரும் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கும் வகையில் உணவு கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்பட்டால் சில அறிகுறிகள் மூலம் குறைபாட்டைக் கண்டறியலாம்.
குழந்தைகள் பசி இல்லாமல் இருந்தாலோ, சோர்வாக இருந்தாலோ இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறது என்று கண்டறியலாம். குழந்தையின் வளர்ச்சியில் பற்றாக்குறை, நடத்தைப் பிரச்னைகள் , அடிக்கடி நோய்த்தொற்றுக்கு ஆளாதல் போன்ற பிரச்னைகள் இரும்புச் சத்து பற்றாக்குறையால் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு இறைச்சியைக் கூழாக மாற்றிக் கொடுக்க வேண்டும். பீன்ஸ், பசலைக்கீரை போன்ற காய்கறிகளைதர வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகளைத் தந்தாலும் இரும்புச் சத்து கிடைக்கும். கடல் உணவுகள், உருளைக்கிழங்கு, உலர் திராட்சை, கொட்டைகள், பருப்பு வகைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைத் தினமும் கொடுக்க வேண்டும்.
இரும்புச் சத்துதான் நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உடலின் பிற பாகங்களுக்குக் கடத்துகிறது. இரும்புச் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும்.
Comments