சீந்தில்கொடி, ஆரஞ்சுபழம், விரலி மஞ்சள்.. கொரோனாவை விரட்டும் அற்புத இயற்கை மருத்துவம்!


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அது நம்மிடம் ஏற்படுத்தும் காய்ச்சல், சளி, தொண்டைபுண் ஆகியவற்றின் தாக்கத்துக்கான மருத்துகளைத்தான் தருகின்றனர். காய்ச்சல், சளி, தொண்டைபுண் ஆகியவற்றுக்கு இயற்கை மருத்துவ ஆர்வலர் பெல்சின் அவர்கள் எளிய மருத்துவம் சொல்கிறார்.  

அலட்சியம் வேண்டாம்

கொரோனா... இன்றல்ல அன்றும், என்றும் இருக்கும். ஆனால் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஏதோ சீனாவின் உகானில்தான் உருவானது. அங்கிருந்துதான் உலகம் முழுக்கப் பரவியது என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. பறவைகள், விலங்குகளில் இருந்து பரவியது என்பதற்கான சான்றுகளும் இல்லை. இந்தச் சூழலில் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

கொரோனா என்பது இன்று, நேற்று உருவானது என்று யாராலும் திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை. இப்போது அதுவல்ல பிரச்சினை. அதை எதிர்கொள்வது ஒன்றே அனைவரின் கடமையாக இருக்கிறது. மிகச் சாதாரண காய்ச்சலை எப்படி எதிர்கொள்கிறோமோ அப்படி எதிர்கொண்டாலே போதும். ஆனால் அலட்சியம் வேண்டாம், பதற்றமும் வேண்டாம்.

 

சீந்தில் கொடி என்ற அற்புத மூலிகை

 

சீந்தில் கொடி என்ற ஒரு மூலிகை உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ள இந்த மூலிகைக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி என பல பெயர்கள் உண்டு. கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் செழித்து வளரக்கூடியது. உதாரணமாக சென்னையில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த சீந்தில்கொடியின் இலை அல்லது தண்டுப்பகுதி 50 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் 5 மிளகு, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடிக்கலாம். அல்லது சீந்தில் கொடியின் இலை அல்லது தண்டுப்பகுதியுடன் வேப்ப இலை அல்லது குச்சி, மிளகு, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். இப்படி அருந்துவதன்மூலம் எந்தவகையான காய்ச்சலும் நம்மை விட்டு விலகும். குறிப்பாக இன்றைய சூழலில் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் கொடிய வகை ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காக்கும். இந்தக் கசாயத்தை காலை, மாலை என மூன்று நாள் குடித்து வந்தாலே பாதிப்பு முற்றிலும் விலகும்.

 

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நம் ஊரைப்போல துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, வேப்பிலை போன்றவற்றை உண்ணமாட்டார்கள். ஏன், நம்மூரிலும்கூட சித்த மருத்துவ எதிர்ப்பாளர்கள் மற்றும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா என்று வியாக்கியானம் பேசுபவர்களும்கூட இந்த இஞ்சி, மிளகை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பாளர்கள் உண்ணும் உணவில் அவர்களையும் அறியாமல் இஞ்சியும், மிளகும் சேர்ந்திருக்கும். அவைதான் அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாத உண்மை.

 

ஆரஞ்சு என்ற அற்புதம்

 

ஆரஞ்சுப்பழம் தலைவலி, காய்ச்சல் குறிப்பாக டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதேபோல் டி.பி, தொண்டைப்புண், தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கும் நல்ல பலன் தரும். உடலில் உப்புத்தன்மை அதிகமாக நச்சுத்தன்மை அதிகரிக்கும்போது சமநிலைப்படுத்தக்கூடியது. நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் படைத்தது. ஆரஞ்சு பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தினால் ஜலதோஷம் குணமாகும். இதேபோல் சளி, ஆஸ்துமா, காச நோய், தொண்டைப்புண் வந்தால் 125 மில்லி ஆரஞ்சுச்சாற்றுடன் தேன், உப்பு சேர்த்து அருந்தினால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

 

ஆரஞ்சுப் பழத்தின் தோலுக்கும் மருத்துவக்குணங்கள் அதிகம் உண்டு என்பதால், அதன் அடிப்படையில் ஆரஞ்சு பழத்தோலில் ரசம் செய்து அருந்தலாம். கடுகு உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து ஆரஞ்சுப்பழத்தோலைச் சேர்த்து வதக்கியதும் மஞ்சள்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்தால் வித்தியாசமான ஆரஞ்சுப் பழத்தோல் ரசம் தயார். வேறொரு முறையிலும் ரசம் செய்யலாம். முதலில் எண்ணெய் ஊற்றி கடுகு,காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் இரண்டு பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு வேக வைத்த பருப்புத்தண்ணீர், ரசப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நுரை வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும். சூடு லேசாக ஆறியதும் கால் கப் ஆரஞ்சு ஜூஸ், கால் டீஸ்பூன் ஆரஞ்சுத்தோல் சேர்த்தால் அருமையான ஆரஞ்சு ரசம் தயாராகிவிடும்.

 

வல்லாரை கீரை

 

இதேபோல் வல்லாரைக் கீரையில் துவையல் அல்லது சட்னி செய்து சாப்பிடுவது ரத்தசோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றைப் போக்கும். டி.பி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மருத்துவக் குணம் நிறைந்த இந்த வல்லாரையுடன் உளுந்து, தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான வல்லாரைத்துவையல் தயார்.

பொது மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதி இல்லாததால் பலர் நமது பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். பல வீடுகளில் இஞ்சி, மிளகு, துளசி, தூதுவளை, எலுமிச்சை, நெல்லிக்காய் என கிடைப்பதைக் கொண்டு கசாயம், ஜூஸ் வைத்துக் குடிக்கிறார்கள். சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் வீடுகளின் முன் வேப்பிலையை செருகி வைத்திருக்கிறார்கள். இன்னும் விரைவாக வேப்பம்பூ பூக்கும். அந்தப் பூவில் ரசம், துவையல் என செய்து சாப்பிடலாம். இஞ்சி டீ, சுக்கு மல்லி வெந்நீர் தயாரித்து அருந்தலாம்.

 

விரலி மஞ்சள்

 

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் சுவாசம் எளிதாகும். மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்குச்சளி போன்ற பிரச்சினைகள் சரியாகும். ஆடாதொடை கசாயம் அருந்தினால் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளும் சரியாகும். துளசி, தூதுவளை, ஓமவல்லி போன்ற மூலிகைச்செடிகள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளைக் குணப்படுத்தும். தூதுவளை இலை, பூ போன்றவை ஆஸ்துமாவைக் குணப்படுத்தும். வெள்ளைப்பூண்டும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை சரிப்படுத்தும். இரவு தூங்குவதற்கு முன் 10 வெள்ளைப்பூண்டு பற்களை தோலுரித்து பாலில் வேக வைத்து தலா ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் பனங்கல்கண்டு சேர்த்துக் கடைந்து குடிக்கலாம். இதன்மூலம் நெஞ்சுச்சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா தொந்தரவுகளும் சரியாகும். பகல் உணவில் தலா நான்கு துளசி இலை, வில்வ இலை, மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலும் ஆஸ்துமா தொந்தரவு இருக்காது.

இது வெயில் காலம் என்பதால் ஒரேயடியாக இந்த மருத்துவத்தை செய்ய வேண்டாம். உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றைச் சாப்பிடுங்கள். நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. சளி, காய்ச்சல் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வதுடன் அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவம் எடுத்துக் கொண்டால் கொரோனா என்றில்லை எந்த நோய்களையும் வெல்லலாம்.

-மரிய பெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#CoronaTreatment  #CoronaNatureTreatment  #CoronaHearbalTreatment #HeartleavedMoonseed

 


Comments


View More

Leave a Comments