மொய்விருந்து எனும் பாரம்பர்யம்; நலிந்தவர்களை பாதுகாக்கும் விநோத விருந்து
சின்னகவுண்டர் படத்தில் நலிந்த நிலையில் உள்ள சுகன்யா மொய்விருந்து நடத்தி பணம் வசூலிப்பார். அந்த விருந்தில் பங்கேற்கும் விஜயகாந்த் மொய் சாப்பிட்டுவிட்டு, அந்த இலையின் கீழ் தாலியை வைத்து விட்டு தமது காதலைச் சொல்லுவார்.
இப்படி மொய்விருந்து என்ற வார்த்தை தமிழகத்தில் பிரபலமானது இந்தத் திரைப்படத்தின்மூலம்தான். ஆனால், இந்த திரைப்படம் வருவதற்கு முன்பே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக மொய் விருந்து என்ற கலாசாரம் இருந்து வந்திருக்கிறது.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து நடத்தப்படுகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்டுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்கள் நடத்த பணத்தேவை இருப்பவர்கள் மொய் விருந்து நடத்தி அதன் மூலம் தங்களுக்கான பணத்தை ஈட்டுவது வழக்கம்.
பிரமாண்டமாக நடத்தப்படும் இந்த மொய்விருந்தில் மொய்விருந்து நடத்துபவரின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் பங்கேற்று விருந்து உண்டு, தங்களால் இயன்ற பணத்தைத் தருவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு கிராமத்தில் கடந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் பிரமாண்டமான மொய் விருந்து நடத்தி உள்ளார். 50 ஆயிரம் பத்திரிகைகள் அடித்து மொய்விருந்துக்கு வரும்படி விநியோகித்தார். மொய்விருந்து அன்று ஒருடன் ஆட்டுக்கறி சமைத்து அசத்தினார். பிரமாண்ட அடுப்பில் பெரிய பாத்திரங்களில் மொய்விருந்து சமையல் நடைபெற்றது.
பிரமாண்ட பந்தல் அமைக்கபட்டு பல பந்திகள் மொய்விருந்து நடைபெற்றது. மொய்விருந்தில் நான்கு கோடி ரூபாய் வசூலானது. மொய் வசூலிக்க 14 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருந்தது. கல்லாலங்குடியில் உள்ள ஒரு வங்கிக்கிளையின் சார்பில் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் உடனுக்குடன் எண்ணப்பட்டது. இத்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் 5 கோடி ரூபாய்க்கும் மேல் மொய்விருந்து வசூலான நிலையில் கஜாபுயல் தாக்கத்தின் காரணமாக கடந்த ஆண்டு நான்கு கோடி ரூபாய்தான் வசூலாகிஇருந்தது.
இந்த ஆண்டு கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு எங்குமே மொய்விருந்துகள் நடைபெறவில்லை. கொரோனா காரணமாக நிதி இன்றி தவிப்பவர்கள், கொரோனா ஊரடங்கு முடிந்த உடன் மொய்விருந்து நடத்துவார்கள் என்று தெரிகிறது.
Comments