தினமும் நீங்கள் உண்ணும் உணவு ஊட்டசத்துகள் கொண்டதாக இருக்கட்டும்...


சரிவிகித ஊட்டசத்து உணவை உட்கொள்வதே நம் உடலுக்கு ஆரோக்கியம்தரும் செயல்பாடாகும். சரிவிகத ஊட்டசத்து உணவுக்காக நீங்கள் எங்கும் தேடிஅலைய வேண்டாம். நீங்கள் இப்போது உண்ணும் உணவையே ஊட்டசத்து மிக்கதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதுமானது.

1.நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள்

உணவில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். காலையில் கற்றாழை ஜூஸ், துளசி தண்ணீர் குடிக்கலாம். இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை நிலைத்திருக்கச் செய்யும்.

2. சட்னி வகைகள்

சாதத்தை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் சாதம் சாப்பிடும்போது அத்துடன் அதிக நுண்ணூட்டசத்து கொண்ட உணவுகள் அதிகம் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.  இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னியும், சாத த்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தொக்கு வகைகளையும் சாப்பிட நமது மூதாதையர்கள் நம்மை பழக்கி இருக்கின்றனர். சட்னியில் சேர்க்கப்படும் பொருட்களாலும், ஊறுகாய், தொக்கு வகைகளில் சேர்க்கப்படும் பொருட்களிலும் உள்ள  ஊட்டசத்துகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் நம் பாரம்பர்ய உணவில் நம் மூதாதையர்கள் சேர்த்திருக்கின்றனர். புதினா சட்னி, தக்காளி சட்னி, நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவற்றில் உள்ள சத்துகள் நமக்கு ஊட்டத்தைத் தரக்கூடியவை.

3. நன்மை தரும் பாக்டீரியாக்களைக் கொண்ட புரோபயோட்டிக் உணவுகள்

புரோபயோட்டிக் உணவுகள் என்று நாம் எங்கும் போய் தேட வேண்டியதில்லை. நாம் தினமும் சாப்பிடும் வாழைப்பழம், தயிர், மோர், வெண்ணைய் போன்ற உணவுப் பொருட்களிலேயே இருக்கின்றன. இவற்றை தினமும் அவ்வப்போது இந்த உணவை சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். தயிர் போன்ற உணவுகள் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

4. காய்கறிகள், பழங்கள்

காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள வேண்டியது மிகவும் முக்கியம். பழங்களை பழக்கலவையாக செய்து சாப்பிடலாம். காய்கறிகளை தயிருடன் சேர்த்து ரைத்தாவாக செய்து சாப்பிடலாம்.  காய்கறிகள் கலந்த கிச்சடியும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் அவை உடலின் ஜீரண சக்திக்கு உதவக் கூடியவை.

-பா.கனீஸ்வரி

#NutritiousFoods  #HealthyFoods #EveryDayHealthyFood

 


Comments


View More

Leave a Comments