அடுப்பில்லா சமையல்செய்து அசத்திய பள்ளி ஆசிரியர்கள்


 

கோவையை சேர்ந்த ருதம்பராபவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் சார்பில்  கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் கடந்த  23.4.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவ, மாணவியர்களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவு முறைகளையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளை நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 

 

ஒவ்வொரு இல்லங்களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்லதொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது. 

நிகழ்வில் கற்றுதரபட்டதுடன்  மதிய உணவாக .அருகம்புல் ஜுஸ், லெமன்புதினா ஜுஸ், முக்கனி சாலட், வல்லாரை கீர், எனர்ஜி லட்டு, நுங்கு பாயாசம், வேர்க்கடலை சாலட், வாழைப்பூ பொரியல், பீட்ரூட் பேபிகார்ன் சாலட், பூசணி வெள்ளரி பச்சடி, அரசாணிக்காய் ஊறுகாய், கம்பு அவல்பொங்கல், சிவப்பரிசி காரப்புட்டு, பூங்கார் இட்லி, பாசிபருப்பு வடை, தேங்காய் சாதம், தூயமல்லி தயிர் சாதம், மாப்பிள்ளை சம்பா ஸ்வீட், சோள அவுல் பிரயாணி, கொடாம்புளி பானகம் ஆகிய இயற்கை உணவு வகைகள் வழங்கப்பட்டன. .

செய்தி, படங்கள் நன்றி;இயற்கை அங்காடி வாட்ஸ் ஆப் பதிவு 


#OrganicFoods   #WithoutStoveCooking  #RudambaraFoundation  #SripatanjaliEeswaran


Comments


View More

Leave a Comments