சபாஷ் கனிமொழி எம்பி அவர்களே....


 

தூத்துக்குடியில் ஆதரவற்றோர்களுக்கு, அந்த தொகுதியின் எம்.பி-யும் முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஏற்பாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதரவற்றோரின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. பலரும் தன்னார்வலர்களாக உதவி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஆதரவற்றோருக்கு தொகுதியின் எம்.பி-யான கனிமொழி உணவு அளித்து வருகிறார்.

தூத்துக்குடி தொகுதியில் உள்ள கனிமொழி எம்.பி-யின் அலுவலக வீட்டில் உணவு தயாரிக்கப்படுகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு தயாரிக்கப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. சாம்பார் சாதம், பிரியாணி, தயிர்சாதம் என்று தினமும் வெவ்வேறு வகையான உணவுகள் பொட்டலம் போடப்பட்டு ஜீப் மூலம் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தப்பணியில் தி.மு.க மகளிரணியினர் மற்றும் திமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். கனிமொழியை பின்பற்றி பிற மாவட்ட தி.மு.க-வினரும் இதுபோல ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Comments


View More

Leave a Comments