நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்..


.

1.சூப் வகைகள்;

கொரோனா தொற்று மற்றும் தென்மேற்கு பருவமழை காலம்ஆகியவற்றின் காரணமாக இப்போது இருமல் மற்றும் சளி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, சிக்கன் சூப் அல்லது காய்கறிகள் சூப் குடித்தால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். தொண்டை கரகரப்புக்கும் சூப் குடிப்பது நல்லது. மூக்கடைப்பையும் சரி செய்யும். அழற்சி ஏற்படுத்தாது.

2. வாழைக்காய்

உங்களுக்கு செரிமான கோளாறு அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் வாழைக்காய் சாப்பிடலாம். இது உணவுக்குழாயில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும். வாழைக்காயில் பொட்டாசியம் போன்ற மின் அயனிகள் உள்ளன. வயிற்றுப்போக்கினால் உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்ய மின் அயனிகள் உதவுகின்றன.

3.தேன்; மூக்கடைப்பு, இருமல், சளி ஆகியவற்றை தேனின் மூலம் குணப்படுத்தலாம். இது உடலில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மையை குறைக்கிறது. இது பாக்டீரியாவுக்கு எதிர்பாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள விட்டமின் சி , கால்சியம், இரும்பு சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு சக்தியை அளிக்கும். தேன் என்பது இயற்கையிலேய இருமலை தணிக்கும் தன்மை கொண்டது.

4.பச்சைக்காய்கறிகள்; பெரிய இலைகள் மற்றும் சிறிய இலைகள் கொண்ட கீரைகள் பசலைக்கீரை ஆகியவை ஆரோக்கியத்துக்கு நல்லது. வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து கொண்டது. வைட்டமின் கே என்பது இரத்த உறைவு மற்றும் ரத்த இழப்பை தடுக்கிறது.

5.இஞ்சி; வயிறு பிரச்னைகளை சரி செய்யும். குட்டல் மற்றும் வயிற்றுக்கோளாறுகளை சரி செய்ய சிறிதளவு இஞ்சி தேநீர்  அருந்தலாம்.   இஞ்சி தேநீருடன், தேன் மற்றும், எலுமிச்சை ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

6.ஆப்பிள்; கரையக்கூடிய, கரையாத நார் சத்து இரண்டையும் ஆப்பிள் கொண்டிருக்கிறது. வயிற்றுப் போக்கைக் குறைக்கும், மல சிக்கலைத் தடுகிறது. அதிக பட்ச பலன் கிடைக்க ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும்.

7.மஞ்சள்; ஆரோக்கியம் அளிக்கும் உணவுப்பொருட்களில் மஞ்சளுக்கு என்று சிறந்த இடம் உண்டு. மஞ்சள், உடல் எரிச்சல் தன்மையை குறைக்கும், தீமை செய்யும் பாக்டீரியாக்களுக்கு எதிரானது  மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும். இரவு படுக்கும் முன்பு, ஒரு கப் பாலுடன், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

தினமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது.


Comments


View More

Leave a Comments