முடி, தோல், நகங்கள் வளர்ச்சிக்கு கெரட்டின் சத்துள்ள உணவுகள் உண்ணுங்கள்...


 

நமது உடலின் தோல், முடி, நகங்களில் கட்டமைப்புக்கு முக்கியமான தேவை கெரட்டின் என்ற சத்தாகும். இந்த சத்து சில உணவுப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உங்கள் தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மிகவும் அதிக நுண்ணூட்ட சத்துகள் நிரம்பி இருக்கின்றன. இவை கெரட்டின் சத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ப்ரோவிட்டமின் ஏ கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ-வை உடலில் உற்பத்தி செய்கின்றன. இந்த வைட்டமின் ஏ-யானது கெராட்டின் தொகுப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்கள் தோல் மற்றும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டு

வெங்காயத்தைப் போலவே பூண்டில் என்-அசிடைல்சிஸ்டீன் அதிக அளவுக்கு இருக்கிறது. இது உங்கள் உடலில் எல்-சிஸ்டைனாக மாறி  கெரட்டின் சத்து உள்ள அமினோ ஆசிட் ஆகிறது. தோல் நலத்துக்கு உதவும். பூண்டு சாறு, கெரட்டினோசைட் செல்களைப் பாதுகாக்கிறது.

கேரட்

கேரட்டில் புரோ வைட்டமின் ஏ-வை அதிக அளவில் கொண்டுள்ளது. கேரட்டில் வைட்டமின் சி-யும் உள்ளது. கேரட்டில் உள்ள கொலாஜன் தொகுப்பு முடி மற்றும் தோல், நகங்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடியதாகும். வைட்டமின் சி காயத்தை குணப்படுத்தும் திறன் கொண்டது. தோல் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

மாம்பழம்

மாம்பழம் கெராட்டின் தொகுப்பு வளர்ச்சிக்கு துணை புரியும் கூடுதல் நுண்ணூட்ட  சத்துகளைக் கொண்டுள்ளது.  குறிப்பாக புரோடவிட்டமின் ஏ அதிகம் கொண்டிருக்கிறது. விட்டமின் சி உள்ளிட்ட முடி மற்றும் தோல் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துகளையும் கொண்டிருக்கிறது.

வெங்காயம்

கெராட்டின் உற்பத்திக்கு வெங்காயம் உதவுகிறது. போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், ஆரோக்கியமான முடி வளர்வதற்கு வெங்காயம் மிக சிறந்ததாக இருக்கிறது.

முட்டை

கெராட்டின் உற்பத்தியை முட்டை அதிகரிக்கிறது. கெராட்டின் தொகுப்புக்கு தேவையான பயோடின் என்ற நுண்ணூட்ட சத்தை முட்டை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் பி12 ஆகிய சத்துகளும் முடையில் உள்ளன.


Comments


View More

Leave a Comments