பன், பிரட், பிஸ்கெட்தான் காலை உணவு என்று சொல்பவர்கள் இதைப் படியுங்கள்
அவசரத்துக்காக கடையில் கிடைக்கிறது என்று பன், பிரட் போன்ற பேக்கரி உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உடம்புக்கு நீங்களே தீமையை காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
பேக்கரியில் பெரும்பாலான பண்டங்கள் மைதாவில், குறிப்பாக கோதுமை மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதா வெள்ளை வெளேர் என்று இருப்பதற்கு செயற்கை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. மைதாவில் போதுமான அளவு நுண்ணூட்ட சத்துகள் எதுவும் இல்லை. சாப்பிடுவதற்கு இனிப்பாக இருக்கும் அதைத்தவிர வேறு ஏதும்இல்லை.
பேக்கரியில் தயாரிக்கப்படும் பொருட்கள் வேக வைக்கப்பட்டாலும் கூட அவை ஆரோக்கியம் என்று சொல்லிவிட முடியாது. அவற்றில் இனிப்பு, கார்ப்போ ஹைட்ரேட் போன்ற இனிப்புகள் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு நல்லதல்ல. பேக்கரி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், கொழுப்பு சத்து அதிகரிக்கும். இதனால், இதயநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.
பேக்கரிகளில் புளிக்க வைப்பதற்காக ஈஸ்ட் சேர்ப்பது வழக்கம். ஈஸ்ட் அளவோடு சேர்க்கப்பட்டால் அதனால் நன்மைதான். அதிக அளவு ஈஸ்ட் சேர்க்கப்பட்ட உணவுகள் கெடுதலானவை. உடல் பருமனை அதிகரிக்கக் கூடியவை.
பேக்கரிக்கு பதில் மாற்று என்ன?
இப்போது இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இயற்கை உணவுகள் சேர்க்கப்பட்ட நொறுக்கு தீனிகளுக்கு நீங்கள் மாறுவதுதான் இதற்கு ஒரே வழி.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்கள், ரொட்டிகள் ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியத்தை உறுதி செய்யுங்கள்.
Comments