தரமான ருசியான உணவு வழங்கும் மயிலாப்பூர் தம்பதி


சென்னை பெருநகர வாழ்க்கையில் ஒரே ஒரு வேலையை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நகர்த்துவது கடினம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போக வேண்டும். அப்படி இல்லையெனில் கணவன் அலுவலகம் செல்ல, மனைவி வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலை செய்வார். ஆனால், மயிலாப்பூரில் ஒரு தம்பதி வேலைக்கு செல்லும் நேரம் போக, வீட்டிலேயே சிற்றுண்டி செய்து குறைந்த விலைக்கு அதே நேரத்தில் தரமானதாக விற்பனை செய்கின்றனர்.

மயிலாப்பூர் சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த், கிருத்திகா இருவரும் வீட்டில் இருந்த படி ஓய்வு நேரத்தில் பிடி கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து வந்தனர். வீட்டின் வாசலிலேயே வைத்து விற்பனை செய்தனர். இந்த சிற்றுண்டிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்போது அடுத்த கட்டமாக டிபன் வகைகளை செய்து விற்கின்றனர்.

புட்டு வகைகள், ஆப்பம், கடலைக்கறி ஆகியவற்றை விற்கின்றனர். ஒரு செட் ஆப் கடலைக்கறியுடன் 30 ரூபாய் மட்டும்தான். தரமான உணவு வேண்டுவோர் இங்கு சாப்பிடலாம். அவர்களை 9962836436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

செய்தி, படம் நன்றி;மயிலாப்பூர் டைம்ஸ் 

 

 

 


Comments


View More

Leave a Comments