இரவு உணவு எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?


இரவு உணவு அல்லது டின்னர் எப்போது சாப்பிட வேண்டும் என்று வழிமுறைகள் உள்ளன. நமது பாரம்பர்யப்படி இரவு விளக்கேற்றும் முன்பு, அதாவது வீட்டில் மின் விளக்குகளைப் போடும் முன்பு இரவு உணவை முடிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் இது சாத்தியமில்லை. இப்போதெல்லாம் மின்நைட் உணவகங்கள் என்ற பெயரில் நள்ளிரவு திறக்கப்படும் உணவகங்கள் விடியவிடிய செயல்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற கலாசாரமும் அதிகரித்து விட்டது. ஆனால், இவையெல்லாம் உடல்நலத்துக்கு தீங்கானதுதான்.

இரவு உணவை அதிக பட்சம் இரவு எட்டு மணிக்குள் உண்டு விட வேண்டும். அப்போதுதான் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். அப்போதுதான் உணவு போதுமான நேரம் செரிக்கும். ஓய்வுக்கும் நமக்கு போதுமான நேரம் கிடைக்கும். சாப்பிட்ட உடன் தூங்க க் கூடாது என்பதும் மருத்துவர்களுடன் அறிவுரை. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துத் தூங்குவது மிகவும் நல்லது. குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் கழித்தாவது தூங்க வேண்டும் என்பதும் விதிமுறை. அப்போதுதான் உணவு செரிப்பதற்கான பணிகள் முறையாக நடைபெறும். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, உடனே படுக்கைக்குச் செல்லக் கூடாது.

இரவில் அதிக கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் உடல் எடையும் சீராக இருக்கும். இரவு சீக்கிரம் படுத்து தூங்கும்போது செரிமான சக்தி நன்றாக செயல்படும். காலையில் எழும்போது சோர்வு இருக்காது.

இரவு உணவு எடுத்துக் கொண்டபின்னர், நொற்றுக்குத் தீனிகளையும் சாப்பிடக் கூடாது. மதிய உணவுக்குப் பின்னர் இரவு உணவு உண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரவு உணவை சீக்கிரமே எடுத்துக் கொள்ளலாம். இரவு  உணவு உண்ணும்போது தொலைகாட்சி அல்லது சினிமா பார்த்துக் கொண்டே உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவில் கவனம் வைத்து சாப்பிட்டால்மட்டுமே உணவு சரியான முறையில் உண்ணப்பட்டு செரிமானம் ஆகும். ஆரோக்கியமாக இருக்க இரவு சீக்கிரம் உண்ணுங்கள், உடல் எடையை சரியான அளவில் மேற்கொள்ளவும் இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு விட்டு, சரியான நேரத்தில் உறங்கச் செல்வது முக்கியம்.


Comments


View More

Leave a Comments