கொரோனா காலக்கொடுமை; பசியுடன் போராடும் குழந்தைகள்


 

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் தொலைநோக்கு திட்டத்தில் ஒன்றான மதிய உணவுத்திட்டம் ஏழை மக்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக இருக்கிறது. ஆனால், இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதால் வயிற்றுப் பசியையும், அறிவுப் பசியையும் போக்க வழி இல்லாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் சத்துவணவுத்திட்டத்தை நம்பித்தான் உள்ளனர். சத்துணவு அங்காடிகள் மூடப்பட்டிருப்பதால், குழந்தைகளுக்கு ஒருவேளை மட்டுமே அவர்களால் உணவு அளிக்க முடிகிறது.

இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், அன்றாட கூலித்தொழிலாளிகள்தான். கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக இவர்கள் பிழைப்பின்றி இருப்பதால், இவர்கள் குழந்தைகளும் தினந்தோறும் பசியோடு உறங்கச் செல்கின்றன.

தன்னார்வ அமைப்புகள் தரும் உணவுகள்தான் இப்போது அவர்களின் பசியைப் போக்குகின்றன. தவிர கடந்த ஊரடங்கின்போது இலவசமாக வழங்கப்பட்ட‍ அம்மா உணவகங்களின் உணவுகளும் இவர்களின் பசியைப் போக்கின.

விரைவில் அங்கன்வாடி மையங்களை மட்டுமாவது அரசு திறக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

 

 


Comments


View More

Leave a Comments