பிரதமரின் திட்டத்தில் கைகோர்க்கும் ஸ்விக்கி


பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் சாலையோர உணவுக்கடைகளை ஸ்விக்கி தமது செயலியில் இணைக்க உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 125 நகரங்களில் சாலையோரங்களில் உணவகங்கள் நடத்தி வரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இதன் வாயிலாக ஸ்விக்கியில் இணைய உள்ளன. இதன் வாயிலாக சாலையோர உணவகங்கள் அதிக வருவாய் ஈட்ட முடியும். சாலையோர உணவகங்கள் பெரும்பாலானவை சாலையோரத்தில்தான் இருக்கின்றன, ஆனால், நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகத்துக்கு இணையான வகையில் தரத்தில், சுவையிலும் அவை சிறந்து விளங்குகின்றன. போதுமான விளம்பரம் இல்லாமல், உதவி இல்லாமல்தான் சாலையோர உணவகங்கள் வருவாய் குறைவாக இருக்கின்றன. இப்போது ஸ்விக்கியில் இணைவதன் வாயிலாக சாலையோர உணவகங்களும் வருவாயில் சாதிக்க உள்ளன.


Comments


View More

Leave a Comments