குறைந்த கலோரி கொண்ட சாப்பிட்ட திருப்தியை அளிக்கும் உணவுகள் உண்பது முக்கியம்


 

உடல் எடையை நிர்வகிப்பதாக கூறிக் கொண்டு பலர் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது வழக்கம். குறைந்த கலோரி உணவுகள் எடுக்கும்போது அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். அப்போது அடிக்கடி சாப்பிட நேரிடும். அப்போது உடல் எடையை கட்டுப்படுத்தமுடியாமலும் போய்விடுவது உண்டு. எனவே எது சரியான குறைந்த கலோரி உணவு என்பதை தெரிந்தும், அது சாப்பிட்ட திருப்தியை அளிக்கிறதா என்று அறிந்தும்  சாப்பிடுவது மிகவும் முக்கியம். குறைந்த கலோரி கொண்ட அதேசமயம் உங்கள் பசியையும் திருப்தி படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டியதுதான் உடல் எடை குறைப்பில் முக்கியமானது.  அப்படிப்பட்ட உணவுகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம். 
ஓட்ஸ் உணவு 
ஓட்ஸ் உணவு அதிக நார்சத்தும், புரோட்டினும் கொண்டதாகும். கலோரி குறைவான அதே நேரம், திருப்தியான உணவாகவும் இருக்கும். அரைகப் ஓட்ஸில் 148 கலோரிகள் உள்ளன. வயிறு நிறைந்த திருப்தியைத் தரும். 
 
சூப் வகைகள் 
சூப் குடிக்கும்போது அவை முழு வயிறு நிரம்பிய திருப்தியை எப்போதும் கொடுக்கும். உணவுக்கு முன்பு சூப் குடிப்பதன் காரணமாக அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்ணுவது குறையும். நுண்ணூட்ட சத்துகளைக் கொண்ட சூப் உங்கள் உடலின் சக்தியை தக்க வைத்து கொள்ளவும், சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. 
 
சியா விதைகள்
சியா விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பானம், உங்கள் உடல் நலத்துக்கு பொருத்தமான உணவாகும். குறைவான கலோரியுடன் அதே நேரத்தில் அதிக நார்சத்தும் கொண்டதாகும். நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளன. 
 
முட்டை 
அதிக புரோட்டினைக் கொண்டது. 6 கிராம் புரோட்டினும், 72 கலோரிகளையும் கொண்டது. காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது என்பது நாள் முழுவதும் உங்களை பசியின்றி வைத்துக் கொள்ளும். 
மீன் உணவு 
மீன் உணவுகள் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டவை .குறைந்த கலோரி கொண்ட உணவுக்கு சரியான பொருத்தமாக இருப்பது மீன் உணவுகள்தான். நுண்ணாட்டசத்துகள் கொண்ட மீன் உணவு உங்களிடம் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். 
-பா.கனீஸ்வரி 
 
#EatLowCalorieFoods  #satiatedFoods #WeightLossFood  #உடல்எடையைகுறைக்க  #குறைந்தகலோரிஉணவுகள்
 
 
 

Comments


View More

Leave a Comments