குழந்தை பிறந்த பின் தாய் உண்ண வேண்டிய உணவுகள்...


பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும்போது கூடுதல் அக்கறையுடன் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு மிக மிக கூடுதல் அக்கறையுடன் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு தாய்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

சத்துமிக்க உணவுகள் சாப்பிட வேண்டும்

சத்துமிக்க உணவுகள் என்றால் அதிக புரதம் கொண்ட உணவுகளை தாய் உண்ண வேண்டும். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை குறைவாக ருப்பவர்கள் தங்களின் பழையை எடையை மீட்டெடுக்க முட்டை, மீன், கோழி இறைச்சி போன்றவற்றை உண்ண வேண்டும். இவை தாய் மீண்டும் பழைய உடலை பெறுவதற்கு மட்டுமின்றி, குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதற்கான சத்துகள் கிடைப்பதற்கும் உதவும்.

நீர் ஆகாரங்கள் அதிகம் தேவை

குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால் நீர் சத்துகள் நிறைந்த பொருட்களை அல்லது திரவ வடிவிலான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கத்தை விட கூடுதலாக குடிநீர் குடிக்கலாம்.

காஃபியை தவிர்ப்பது நல்லது

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்கள் காஃபின் என்ற பொருளை அதிகம் கொண்ட காஃபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. காஃபி குடிப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே காஃபி குடிக்காமல் இருத்தல் நலம்.

இயற்கை உணவுகள்

இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். திட உணவு உட்கொள்ளும்போது அதில் பாதியை குறைத்துக் கொண்டு பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளலாம். வைட்டமின் சத்துகள் நிறைந்த குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்.  

பா.கனீஸ்வரி

#FoodsAfterPregnancy  #MotherFoods #Should EatAfterBabyBorn #AfterPregnancyFood


Comments


View More

Leave a Comments