கிருஷ்ணஜெயந்திக்கு சிறப்பான உணவுகள்...


மாயக்கண்ணனுக்கு பிடித்த உணவுகளில் முதன்மையானது வெண்ணை. வெண்ணையை படையலிட்டு கண்ணனை வழிபடலாம். உங்கள் வீட்டின் குழந்தைகளான கண்ணன்களுக்கு வெண்ணைய் கொடுக்கலாம்.

கண்ணனின் நண்பரான குசேலர் ஏழ்மையானவர், அவர் கண்ணனை பார்க்க வரும்போது அவல் கொண்டு வருவார். அவலும் கண்ணனுக்குப் பிடிக்கும். அவலில் செய்த உணவுகள் அல்லது அவல் பாயாசம் கண்ணனுக்கு பிடித்தமான உணவில் ஒன்று.

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது சீடை. அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றுடன், வெண்ணைய் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணையில் பொறித்து எடுத்து சுவாமிக்குப் படைத்து, வீட்டின் சின்ன கண்ணன்களுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

சீடையில் குறிப்பாக இனிப்பு கலந்த சீடையும் கிருஷ்ணனுக்கு படைக்கலாம். சீடை மாவில் வெல்லப்பாகு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும். தின்ன தின்ன திகட்டாத இனிப்புடன் இருக்கும் வெல்ல சீடை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

ரவாலட்டும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் போது படைக்கலாம். ரவை, சர்க்கரை ஆகியவறைற அரைத்துக் கொண்டு, அதில் பால் மற்றும் தேங்காய், நெய் ஆகியவற்றை கலந்து லட்டாகப் பிடித்து ரவா லட்டு செய்யலாம். இதையும் உங்கள் வீட்டு கிருஷ்ணன்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


Comments


View More

Leave a Comments