பசியை போக்கும் ஒரு புரட்சி திட்டம்....


உலகம் விரல் நுனியில் இருக்கும் இந்த டிஜிட்டல் உலகில்தான் உலகில் கோடிக்கணக்கானோர் தினமும் பசியோடு உறங்கச்செல்லும் அவல நிலையும் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த கொரோனோ தொற்று காலம் மேலும் பலரை பட்டினி போட்டிருக்கிறது. மேலும் பலரை ஏழ்மையை நோக்கித் தள்ளி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த கொரோனா தொற்று காலம்தான் பல நல்ல இதயங்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொரோனா தொற்று கால முழு ஊடரங்கின் போது ஏழைகளின் பசியை போக்குவதற்காக பசி புரட்சி திட்டம் என்ற பெயரில் ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அதன் வாயிலாக உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு அளிக்கும் பணியைத் தொடங்கினர். இப்போது தினமும் நூறு பேருக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆதரவற்றோர் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவை அளிக்கின்றனர்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் இந்த சேவையில் பசிபுரட்சி அறக்கட்டளையின் நிறுவனர் சிவபாலன், செயலாளர் அத்தீஸ்வரன், பொருளாளர் முனீஸ்பாண்டி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணி மேலும் தொடர வேண்டும். பலரது பசியை அவர்கள் போக்க வேண்டும். அவர்களின் அறப்பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 099523 37331 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். https://www.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-104292551390362/ என்ற முகநூல் பக்கத்திலும் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


Comments


View More

Leave a Comments