பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி


சூலூர்;  கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

வள்ளலாரின் பக்தரான கிருஷ்ணசாமி, அன்பு, கருணையுடன் பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். பிளக்ஸ் போர்டு கட்டுவது, தச்சுவேலை என்று அன்றாடம் கிடைக்கும் வேலைகளை செய்து பொருள் ஈட்டுகிறார்.

மனைவி, இரண்டு குழந்தைகள் என்று எளிய குடும்பத்தின் தலைவராக இருக்கும் கிருஷ்ணசாமி, பசித்தவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். சிறிய வயதில் இவர் பசியின் கொடுமையை அனுபவித்தவர்.எனவே,இப்போது யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த உணவு கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். ஆரம்பத்தில் தமது சொந்த செலவில் ஆதரவற்றோருக்கு உணவு கொடுக்கும் பணியைத் தொடங்கிய கிருஷ்ணசாமிக்கு இப்போது அவரது நண்பர்கள், ஹோட்டல் அதிபர்கள் என்று பலரும் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

தினமும் தமது சைக்கிளில் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பசித்தவர்களை தேடி சென்று கொடுக்கிறார். அவருக்கு அவரது மனைவியும் உறுதுணையாக இருக்கிறார். (படம் உதவி; தினமலர் )


Comments


View More

Leave a Comments