மலச்சிக்கலை தீர்க்கும், கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆளி விதையின் மகத்துவம்


ஆளி விதை... பேரைக்கேட்டதுமே அது என்ன பூதத்தோட விதையான்னு கேட்டார் ஒருத்தர். கடுகு செடியைப்போலவே உள்ள இது கடுகு குடும்பத்தைச்சேர்ந்தது. ஆளி விதையை மாவாக்கி சாப்பிட்டீங்கன்னா குடல் அதை நேரடியா உறிஞ்சி அதோட சத்தை உடம்புக்கு தரும்.

ஆளி விதை சாப்பிட்டா எந்த டேஸ்ட்டும் தெரியாது. தினமும் இரண்டு ஸ்பூன் ஆளிவிதை மாவை தண்ணியில கரைச்சோ, தயிர்ல சேர்த்தோ பழச்சாறுல சேர்த்தோ சாப்பிடலாம். புட்டு, தோசை, இடியாப்பம், இட்லின்னு எதாவது ஒரு உணவுல சேர்த்தும் சாப்பிடலாம்.

முக்கியமா ஆளிமாவை சாப்பிட்டா நிறைய தண்ணி குடிக்கணும். இதை தினமும் தொடர்ந்து செஞ்சா அதோட பலனை முழுமையா அனுபவிக்கலாம். இது மலச்சிக்கல், கெட்ட கொழுப்பு, மார்பகப் புற்று நோய், நீரழிவு நோய், ஞாபக மறதி மட்டுமில்லாம உடம்புல உள்ள கழிவுகளை வெளியேத்துறதுக்கும் ஏத்த ஒரு உணவு.

ஆளி விதையில ஆல்பா லினோயிக்ங்கிற அமிலம் இருக்கு. இந்த அமிலம் நாள்பட்ட இதய நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய்கள்ல இருந்து பாதுகாக்கும். அதோட பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராவும் செயல்படும். ஆன்டி- ஆக்ஸிடன்ட், பைட்டோ-கெமிக்கல் எல்லாம் ஆளி விதையில இருக்குறதால கருத்தரிப்பு பிரச்னைகளை நீக்குறதோட மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். இப்பிடி நிறைய சக்தி இருக்கு இந்த ஆளி விதையில..!

ஆபீஸ்ல சார் ஒருத்தர் ஆளி விதையோட மகிமை என்னன்னு கேட்டார். அதோட விளைவு ஆளி விதை பத்தி அலச ஆரம்பிச்சிட்டேன். நீங்களும் அதோட மகிமையை அனுபவியுங்க!

-மரியபெல்சின்

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

 

 

#HealthyFlaxseed #FlaxseedForConstipation #FlaxseedReduceBadCholesterol

Comments


View More

Leave a Comments