முகக்கவசம் அணிந்து கொண்டும் சாப்பிடலாம்


 

முக க்கவசம் அணிந்து கொண்டு உணவு உண்ணுவது, தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது என்பது மிகவும் சிர மமான விஷயம். முக கவசத்தை கையால் தொட்டு கீழே தள்ளக் கூடாது என்று என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அப்படி செய்தால் ஒருவேளை கையில் இருக்கும் வைரஸ் துகள் முக கவசத்தில் பட்டு நமக்கும் , பிறருக்கும் தொற்றை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கின்றனர்.

முககவசத்தை கழட்டி பாதுகாப்பாக வைத்து விட்டு, அதன் பின்னர் பக்கத்தில் யாரும் இல்லாமல் தனியே உட்கார்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது நீங்கள் வாயை அடிக்கடி திறந்து மூடுவதால், அதன் மூலம் பிறருக்கு தொற்று பரவலாம் என்றும் கூறுகின்றனர்.

எனவே, முக கவசம் அணிந்து கொண்டே சாப்பிடுவதற்கு Emma Louise Connolly என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் மாடல்  ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு சர்ஜிக்கல் மாஸ்க் வாங்கிய அவர், ஒரு முகக்கவசத்தை மூக்கில் இருந்து மேல் உதடு வரையிலும், இன்னொரு முக க் கவசத்தை கீழ் உதடு முதல் தாடை பகுதி வரையிலும் அணிந்தார். இப்போது வாயை திறந்து எளிதாகச் சாப்பிடலாம். மாஸ்களைத் தொட வேண்டியதில்லை. அகற்றவும் வேண்டியதில்லை. ந ல்ல ஐடியாவாக பலருக்குத் தெரிந்தது. இப்போது பலர் இதையே பின்பற்றி வருகின்றனர். இரண்டு மாஸ்க் அணிந்து சாப்பிடும் வீடியோவை Emma Louise Connolly தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.


Comments


View More

Leave a Comments