மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரித்து மன நலன் காக்கும் உணவுகள்...


உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ, மனநல ஆரோக்கியமும் அந்த அளவுக்கு முக்கியம்தான். நம் மனது சந்தோஷமாக இருப்பதற்கு, நம் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செரட்டோனின், எண்டோர்பின், டோபமைன், ஆக்சிடோசின் ஆகிய ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்  மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

எனவே இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க வேண்டியது முக்கியம். மனதுக்குப் பிடித்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் மீன், கோழி இறைச்சி, வெண்ணைய், பூசணி விதைகள், வேர்கடலை போன்றவை சாப்பிடுவதன் மூலம் செரட்டோனின் அளவு அதிகரிக்கும். மற்ற ஹார்மோன்களை விடவும் செரட்டோனின் நல்ல தூக்கத்துக்கும், கற்றுக்கொள்ளும் திறனுக்கும் உதவுவதாக இருக்கும்.  

சிலகாரமான உணவுகள் மூலம் என்டோர்பின் ஹார்மோன் அளவை அதிகரிக்கலாம். முட்டை, பட்டாணி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகள் மூலம் டோபமைன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.


Comments


View More

Leave a Comments