சர்வதேச சைவ உணவு உண்போர் தினத்தில் சைவத்தின் சிறப்பை அறியலாம்...


உலகம் முழுவதும் அக்டோபர் ஒன்றாம் தேதியை சைவ உணவு தினமாக கடைபிடிக்கின்றனர். அசைவ உணவானாலும், சைவ உணவானாலும் அதன் அதன் தன்மையில் நிறைகுறைகள் இருக்கின்றன. சைவ உணவில் உடலுக்கு ஆற்றலான சத்துகள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. சைவம் உண்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.

உடலின் ஆற்றலுக்குப் புரதசத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.எலும்பு மற்றும் தசைகளின் வலுவுக்கு புரதசத்து மிகவும் அவசிம்.

உடலில் போதுமான வைட்டமின் சத்து இல்லை எனில் உடல் சோர்வாக இருக்கும். சோர்வு காரணமாக உடல் நலப்பிரச்னைகள் உண்டாகும். காய்கறி. பழங்களில் இயற்கையாகவே உடலுக்குத்தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டசத்துகள் நிறையவே உள்ளன.

தாவரவகை சார்ந்த இயற்கை உணவுகளை உண்பதால் டைப் 2 நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் சாப்பிடுவது நல்லது.

சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சைவ உணவுகளில் வைட்டமின் சி மற்றும் டி மற்றும் மினரல்கள் அதிக அளவு உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

முள்ளங்கி, கீரை வகைகள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள், மாதுளை இதயத்துக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சைவ உணவுகள் பற்றி புகழ்ந்து கூறுவதால் அசைவ உணவுகளை வெறுக்க வேண்டும் என்பதல்ல. அதிலும் ஆரோக்கியம் இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அசைவ உணவை அளவோடு உட்கொண்டால் என்றும் ஆரோக்கியமே


Comments


View More

Leave a Comments