குளிர் மற்றும் மழைக் காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள்


 

அனைத்துப் பருவகாலங்களிலும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வது உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்காது. கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தேநீர் அல்லது காஃபி சாப்பிடுவது சிலருக்கு உடல்நலக்கோளாறை ஏற்படுத்தி விடும். அதே போல குளிர்காலங்களில் மிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டாலும் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

எனவே இப்போதைய பருவநிலைக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.  

மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

 

மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

 மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

 


Comments


View More

Leave a Comments