5.50 லட்சம் பிரியாணி, 323 மில்லியன் கிலோ வெங்காயம்; ஸ்விக்கி டெலிவரி ஆச்சர்யங்கள்
ஊரடங்கு என்றாலும், இல்லாவிட்டாலும் பசிக்கும் வயிற்றுக்கு உணவு என்பது அவசியம் தேவை. அதைத்தான் ஸ்விக்கியின் வித்தியாசமான சர்வே ஒன்று உணர்த்தி இருக்கின்றது.
உணவுகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் அமைப்புகளில் முதன்மையானது ஸ்விக்கி. இப்போது ஊரடங்கு காலத்தில் நோய் தொற்று அபாயத்துக்கு இடையிலும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அசராமல் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையே இந்த நிறுவனம் ஊரடங்கு காலத்தில் டெலிவரி செய்த பொருட்களின் அளவு எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு அசத்தி இருக்கிறது.
அதன் டெலிவரி பட்டியலின்படி பிரியாணி ஆர்டர்கள்தான் முதலிடம் பிடித்திருக்கின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் மக்கள் 5 லட்சத்து 50 ஆயிரம் பிரியாணி பொட்டலங்கள் வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மசாலா தோசையும் அதிக அளவுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு விநியோகிப்பட்டுள்ளது.
காய்கறிகளையும் விநியோகிக்கும் ஸ்விக்கி, இந்த ஊரடங்கு காலத்தில் 323 மில்லியன் கிலோ வெங்காயம் 56 மில்லியன் கிலோ வாழைபழங்களையும் டெலிவரி செய்திருக்கிறது.
டெலிவரி செய்யும் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ 23.65 முதல் அதிகபட்சமாக ரூ.2500 வரை டிப்ஸ்களை வாரி வழங்கி உள்ளனர்.
Comments