பெண்களுக்கான ஆரோக்கியமான உணவு முறை என்ன தெரியுமா?


இன்றைய உலகில் பெண்கள் வீட்டிலும் வேலை செய்து விட்டு, அலுவலகத்துக்கும் செல்பவர்களாக இருக்கின்றனர். எனவே, பெண்கள் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். என்னென்ன சத்துமிக்க உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்று இப்போது பார்க்கலாம். சத்துமிக்க உணவுகள் என்று நீங்கள் கடைகளில் போய் வாங்க வேண்டியதில்லை. ஏற்கனவே நீங்கள் வீட்டுக்கு வாங்கும் பொருட்களிலேயே சத்துகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் காய்கறி சந்தையில் வாங்கும் கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிரம்ப உள்ளது. இது உங்களின் சருமத்தில் சுருக்கம் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. நார்சத்து அதிகம் உள்ளதால் தோலில் புள்ளிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நீங்கள் அன்றாடம் உபயோக்கும் தயிரில் கால்சியம் சத்து அதிக அளவு இருக்கிறது. தயிரில் புரத சத்தும் இருக்கிறது. தயிர் சாப்பிடுவதால் வயிற்று கோளாறுகள் தீரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் தயிரை மோராக மாற்றி குடிக்கலாம்.

ஆப்பிளில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆப்பிள் நம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருவதை தடுக்கிறது. தினமும் சாப்பிட்டால் இதயக்கோளாறுகளைத் தவிர்க்க முடியும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை பழங்களில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது வைட்டமின் சி சத்துகளும் உள்ளன. இதயத்தைப் பாதுகாக்கவும், சருமத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன.

முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்றவை நார்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பும் கொண்டவை. புரத சத்துகளும் அதிகம் இருக்கின்றன. தினமும் ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டாலே போதுமானது.

முட்டையில் வைட்டமின் டி , இரும்பு சத்து ஆகியவை அதிக அளவு உள்ளன. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதயநோய் ஆபத்தில்  இருந்து உங்களை காக்கவும் உதவுகிறது. மிதமான கொழுப்பு, அதிக புரதம், கார்ப்போஹேட்ரேட்டுகள் நிரம்ப உள்ளன. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முட்டை மிகச் சிறந்த உணவாகும்.

மீன் உணவுகளும் ஆரோக்கியமானவைதான். குறிப்பாக சூரை மீன், சால்மன் மீன் போன்றவை ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. மீன்களில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நல்லது.


Comments


View More

Leave a Comments