கூகுளும் உணவு விநியோகத்தில் களம் இறங்குகிறது


 

கூகுள் தேடலில் ஈடுபடுபவர்கள் இனிமேல் உணவுகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். இப்போது இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதற்கான பணிகளில் பரிசோதனை அடிப்படையிலான முயற்சியில் கூகுள் ஈடுபட்டிருக்கிறது.

கூகுள் டாட் காம் மூலம் ஆர்டர்களைப் பெற்று, மூன்றாவது நபர் டெலிவரி ஆப் உடன் இணைந்து உணவு வகைகளை கூகுள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக Dunzo டெலிவரி ஆப் வழியே இணைந்து கூகுள் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dunzo –வை தவிர மேலும் சில மூன்றாவது நபர் ஆப்களின் வழியே உணவு விநியோகம் செய்யவும் கூகுள் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இப்போது அமெரிக்காவில் orderfood.google.com என்ற இணையதளம் வழியே ஆர்டர்களைப் பெற்று உணவு வகைகளை விநியோகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் உணவு விநியோகத்தில் இறங்குவதால், அது இப்போது இருக்கும் சுவிக்கி, ஜொமோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Comments


View More

Leave a Comments