அரிசி சாதம் சாப்பிட்டால் நீரழிவு வரும் என்பது உண்மையா?


வெள்ளை வெளேர் என்று இருக்கும் பட்டை தீட்டபட்ட அரிசியை சாப்பிடால், அதனால் நீரழிவு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அண்மையில் வெளி வந்த ஆய்வும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 
கிராம ம், நகர்புறங்களை எதிர்காலத்தில் தாக்கும் தொற்றுநோய்கள் என்ற ஆய்வு அண்மையில் நடைபெற்றது. 21 நாடுகளி்ல் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளபட்டன. சீனா, இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 1,33,373 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 
ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 35 முதல் 70 வயதுக்குள் இருந்தது. ஆய்வின் முடிவில் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் அரிசியை அடிப்படையாக க் கொண்ட உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக தெரியவந்தது. 
பட்டைதீட்டப்பட்ட அரிசியை சாப்பிடும்போது நீரழிவு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்து. அதனால்தான் பட்டை தீட்டப்படதா சிகப்பு அரிசி மற்றும் பாரம்பர்யமான இயற்கை  முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்களை உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

 


Comments


View More

Leave a Comments