ஊரடங்குகாலத்தில் மாணவர்களின் பசியைப் போக்கும் ஆசிரியர்...
பொது ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு இத்தகைய வசதிகள் இல்லாத நிலையில் அவர்களின் படிப்பு தொடர்ந்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக கிராம ப்பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது.
கிராம ப்பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் பள்ளிக்கு சென்றால் மட்டுமே மதிய உணவு சாப்பிடும் நிலையில் இருந்தனர். இப்போது கொரோனா காரணமாக பள்ளிகள் இல்லை. அவர்களின் பசியையும் போக்க முடியவில்லை.
இந்த சூழலில்தான் விருதுநகர் மாவட்டம் க.மடத்துப்படி பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில் இருக்கும் ஜெயமேரி என்ற ஆசிரியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த ஆசிரியை மொபைலுக்கு அவரது பள்ளியில் படிக்கும் குழந்தை ஒன்று போன் செய்திருகிறது. மிஸ் என்னால பசி தாங்க முடியல. எங்க வீட்ல எதுவுமே சமைக்கல என்று சொல்லி இருக்கிறது.
அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியை ஜெயமேரி அந்த குழந்தைக்கு தம் வீட்டில் உணவு சமைத்து எடுத்துக் கொண்டுபோய்கொடுத்தார். இதேபோல மற்ற குழந்தைகளும்தானே பசியில் வாடும் என்று யோசித்த ஜெயமேரி தம் சொந்த செலவில் உணவு சமைத்து, அனைது குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கினார்.பின்னர் இதன் தொடர்ச்சியாக சில நண்பர்கள் உதவியுடனும், அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி அந்த குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று கொடுத்தார். தம் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்குமே அவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கி வருகிறார். குழந்தைகளை நேசிக்கும் இந்த ஆசிரியையின் செயல் பாராட்டுக்குரியது. மேலும் பல சாதனைகளையும், உதவிகளையும் செய்ய வாழ்த்துகின்றோம்.
Comments